Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீமான் மீது கொலை மிரட்டல் வழக்கு.. கடலூரில் திமுக பிரமுகரை தாக்கிய சம்பவத்தில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

கடலூர்: நேற்றைய தினம் விருத்தாச்சலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சீமான் பங்கேற்ற போது அங்குச் சலசலப்பு ஏற்பட்டது.. சீமான் காரை மறித்து திமுக பிரமுகர் கோஷமிட்ட நிலையில், அவரை சீமான் தாக்கியுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக திமுக பிரமுகர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், இப்போதே அனைத்துக் கட்சிகளும் பிரச்சாரக் கூட்டங்கள், மாநாடும் தொடர்ந்து நடத்தி வருகின்றன. அதன்படி கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொள்ளும் ஒரு கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் இந்தக் கூட்டத்தை நடத்தியது.

Cuddalore Police registered case against Seeman for attacking DMK Functionary in Virudhachalam

சீமான்

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தினர் தங்கள் 20 அம்ச கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றத் தர வேண்டும் என்பதை முன்வைத்து இந்த மாநாட்டை நடத்திய நிலையில், அதில் சிறப்பு விருந்தினராகச் சீமான் பங்கேற்றார். இதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகள் குறித்து சீமான் பேசியிருந்தார். அதுவரை எந்தவொரு சிக்கலும் இல்லாமலேயே இருந்தது.

கூட்டத்தை முடித்துக் கொண்டு சீமான் கிளம்ப ரெடியானார். அவர் காரில் ஏறிய நிலையில், காரும் புறப்பட தயாரானது. அப்போது திடீரென திமுக நிர்வாகி ஒருவர் சீமான் காரை மறித்துள்ளார். சீமான் ஒழிக எனக் கோஷமிட்ட அவர், தொடர்ந்து சில மோசமான கருத்துகளையும் சொல்லி சீமானை திட்டியுள்ளார். இதை கேட்ட அங்கிருந்த நாதகவினர் அவரை சுற்றி வளைத்துள்ளனர்.

தாக்குதல்

அப்போது திடீரென காரில் இருந்து இறங்கி வந்த சீமான், அந்த நபரைத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. அங்கு அதிகளவில் நாம் தமிழர் கட்சியினர் இருந்த நிலையில், அவர்களும் அந்த திமுக பிரமுகரைத் தாக்கியுள்ளனர். இதனால் அங்குப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அந்த நபரின் சட்டை கிழிந்து காயமடைந்துள்ளார். அதன் பிறகே அங்கிருந்த நாம் தமிழர் கட்சியினர் சீமானை அழைத்துச் சென்றனர்.

பரபரப்பு

மேலும், போலீசாரும் தலையிட்டு திமுக பிரமுகரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். சீமான் தொடர்பாகக் கோஷமிட்ட நபர் கிழக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி நிர்வாகி ரங்கன் என்று தெரிய வந்தது.. இரவே அவரை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியினர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்குச் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வழக்குப்பதிவு

இதற்கிடையே இந்த மோதல் தொடர்பாக கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக பிரமுகர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவதூறாகப் பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல நாம் தமிழர் கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் திமுக பிரமுகர் மீதும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் தங்கள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+