கடலூரில் ரயில் மோதியதும்! 50 மீட்டர் தூரத்துக்கு வீசப்பட்ட பள்ளி வேன்! நடந்தது என்ன?
கடலூர்: கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதும், அந்த பள்ளி வேனானது 50 மீட்டர் தூரத்திற்கு பறந்ததாக அங்கிருந்தவர்கள் சோகத்துடன் தெரிவித்தனர். மேலும் கேட் கீப்பர் குறித்தும் ஏராளமான புகார்களை சொல்கிறார்கள்.
கடலூர் செம்மங்குப்பத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் வேன் ஒன்று பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது செம்மங்குப்பத்தில் உள்ள ரயில்வே கேட்டை பள்ளி வேன் கடக்க முயன்றது.

அப்போது அவ்வழியாக விழுப்புரம்- மயிலாடுதுறை செல்லும் ரயிலானது மோதியதில் பள்ளி வேன் அப்படியே 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது. இந்த விபத்தில் வேன் உருக்குலைந்து போனது. அதில் மாணவர்கள் நிமலேஷ், சாருமதி, செழியன் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர்.
மேலும் காயமடைந்த நிமலேஷின் சகோதரர் விஸ்வாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அது போல் பள்ளி வேன் ஓட்டுநர் சங்கரும் கழுத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்கள் கூறுகையில் கேட் கீப்பர் கேட்டை மூடவில்லை.
இதனால் ரயில் வர தாமதமாக இருக்கலாம், இல்லாவிட்டால் ரயில் சீக்கிரமாக கடந்து சென்றுவிட்டதாகதான் அங்கிருந்தவர்கள் நினைத்து தண்டவாளத்தை கடந்தனர். அப்போது பள்ளி வேன் கடந்ததுமே ரயிலும் வந்துவிட்டது. உடனே வேன் மீது மோதியதில் ரயில் 50 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது.
அப்போது வேனானது குழந்தைகளுடன் அப்படியே பறந்தது. இதற்கு முழுக்க முழுக்க கேட் கீப்பரின் அலட்சியம்தான் காரணம். அவர்தான் கேட்டை மூடாமல் தூங்கிவிட்டார். இறந்த அந்த பெண் குழந்தையை பார்க்கவே முடியவில்லை என அப்பகுதியினர் வேதனை தெரிவித்தனர். விபத்தில் அதே இடத்தில் நிமலேஷ் என்ற மாணவன் உயிரிழந்துவிட்டார். மேலும் செழியன், சாருமதி, விஸ்வாஷ் ஆகியோரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு செழியன், சாருமதி இறந்துவிட்டனர்.
இவர்கள் சுப்பிரமணியபுரம் திராவிடமணியின் பிள்ளைகள்தான் சாருமதியும் செழியனும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் விஷ்வாஷும் நிமலேஷும் சகோதரர்களாம். அவர்களில் நிமலேஷ் உயிரிழந்துவிட்டார்.
தற்போது சாருமதியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அப்போது மக்கள் கதறி அழுத காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications