கடலூரில் உடம்பு மீது ஏறி அமர்ந்த சண்முகம்.. கையில் சவுக்கு கட்டை.. மனைவினு கூட யோசிக்கல.. கோர்ட் செம
கடலூர்: கடலூரில் சண்முகத்தை ஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்து கொண்டார் அந்த பெண்.. இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்தனர்.. நாளடைவில் அந்த குடும்பத்தில் ஏற்பட்ட வன்முறை, கொலை வரை சென்றுவிட்டது. இந்த கொலை தொடர்பாக கடலூர் நீதிமன்றத்தில் தண்டனையும் தரப்பட்டுள்ளது. இது மாவட்ட மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்த குடும்ப வன்முறைகள் தொடர்பான வழக்குகளும் நீதிமன்றங்களில் பெருகி வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

தம்பதியினரின் ஒற்றுமை, அவர்களது குழந்தைகளின் பாதுகாப்பு போன்றவைகளில் குடும்ப உறவுகளில் நீதிமன்றங்கள் காட்டும் அக்கறையானது, மிகுந்த கவனத்தை செலுத்தி வருவது பாராட்டத்தக்கது என்றாலும், குடும்ப உறவுகளில் சிதைவுகள் தொடர்ந்து நடைபெறுவது கவலையை தந்து கொண்டிருக்கிறது. இதோ கடலூரில் கடந்த 2017ம் ஆண்டு ஒரு கொடுமை நடந்து, இப்போது குற்றவாளிக்கு முடிவுரை எழுதப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ளது விழப்பள்ளம்.. இந்த பகுதியில் வசித்து வருபவர் தேசிங்கு. இவரது மனைவி பெயர் ரத்தினாபதி. இவர்களுக்கென சொந்தமாக வீடு உள்ளது.. இந்த வீடு ரத்தினாபதி பெயரில் உள்ளது.. இந்த தம்பதிக்கு தமிழ்ச்செல்வி என்ற 35 வயது மகள் இருக்கிறார்.
சொந்த வீடு - குடிபோதை
இவர் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (45) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சதீஷ்ஸ்ரீ, ஷர்மிளா, சத்திய பிரியா என்ற 3 மகள்களும், சஞ்சய், சம்பத் என்ற 2 மகன்களும் உள்ளனர். இதில் கூலி தொழிலாளியான சண்முகத்துக்கு குடிப்பழக்கம் உள்ளது.. தினமும் மூக்கு முட்ட குடித்துவிட்டு வந்து, தமிழ்ச்செல்வியிடம் தகராறு செய்வதையே வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.
எப்போது குடிபோதையில் தகராறு செய்தாலும், மாமியார ரத்தினாபதிககு சொந்தமான வீட்டை, தன்னுடைய பெயருக்கு எழுதி தர சொல்லி தினமும் தமிழ்ச்செல்வியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்... இந்நிலையில் சம்பவத்தன்று அதாவது, கடந்த 18.9.2017 அன்று சண்முகம் வழக்கம்போல், குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.. வழக்கம்போல மாமியார் பெயரில் உள்ள வீட்டை, தன்னுடைய பெயருக்கு எழுதி கேட்டு தமிழ்ச்செல்வியிடம் தகராறு செய்தார்.. இதற்கு வழக்கம்போல் தமிழ்ச்செல்வி ஒப்புக் கொள்ளவில்லை.
பெண்களை சரமாரியாக தாக்கினார்
இதனால் உச்சக்கட்ட ஆத்திரம் அடடைந்த சண்முகம், சவுக்கு கட்டையாலேயே தமிழ்ச்செல்வியை அடித்துள்ளார். வலி பொறுகக முடியாமல் தமிழ்ச்செல்வி அலறியதை கேட்டு, அவர்களது மகள் சதீஷ்ஸ்ரீ ஓடிவந்து தடுத்துள்ளார்.. ஆனால், அவரையும் கண்மூடித்தனமாக அடித்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் 20.9.2017 அன்று மாலை சண்முகம், தமிழ்ச்செல்வி மீது அமர்ந்து கொலை வெறியுடன் அவரை தாக்கியிருக்கிறார்.. இதை பார்த்த அவரது மகள் ஷர்மிளாவையும் தடியால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த தமிழ்ச்செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர்.
நீதிபதியின் அதிரடி தீர்ப்பு
மேலும் அவர் மீது கடலூர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சாட்சிகள் விசாரணை நடந்து வந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி லட்சுமி ரமேஷ் தீர்ப்பு தந்துள்ளார்..
அவர் தன்னுடைய தீர்ப்பில, சண்முகத்தின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சத்து பத்தாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் வளர்மதி ஆஜராகி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications