தங்க பத்திரம்.. கடலூர் சார் பதிவாளர் அசிங்கமா சிக்கிட்டாங்க! நெய்வேலி வீட்டிற்குள் திகைத்த ஆபீசர்ஸ்
கடலூர்: தமிழகத்தில் சார் பதிவாளர்கள் அடிக்கடி மோசடியில் சிக்கி வரும்நிலையில், கடலூர் பெண் அதிகாரி தையல் நாயகி குறித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது, லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.. அந்தவகையில், விஏஓ, சர்வேயர், சார் பதிவாளர்கள் என பலரும் சிக்கி வருகிறார்கள்.

தையல் நாயகி: இவர்கள் மீதான புகார்கள் உறுதி செய்யப்பட்டு, கையும் களவுமாக சிக்கியதன் பேரிலேயே இவர்கள் கைதாகி வருகிறார்கள்.. அந்தவகையில், விழுப்புரம் இணை சார்-பதிவாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினார்கள்.. இந்த சோதனையில் இணை சார்-பதிவாளர் தையல்நாயகியிடமிருந்து கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.1.80 லட்சம் பறிமுதல் செய்ததையடுத்து, நெய்வேலியில் உள்ள தையல்நாயகி வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.. இதனால் கடந்த 2 நாட்களாகவே நெய்வேலியில் பரபரப்பு பற்றிக் கொண்டுவிட்டது.
சார் பதிவாளர்: நெய்வேலி அருகே உள்ளது வடக்குத்து என்ற பகுதி.. இங்கு தான் தையல்நாயகியின் வீடு உள்ளது.. இவர் விழுப்புரம் இணை சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார்.. பத்திரப்பதிவுக்கு யார் வந்தாலும், அவர்களிடம் லஞ்சம் வாங்கிவிடுவாராம் தையல்நாயகி.. இதுகுறித்து நிறைய புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு சென்று கொண்டேயிருந்த நிலையில்தான், தற்போது இந்த அதிரடி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
சார் பதிவாளர் அலுவலகத்தில் 1.80 லட்சம் பணத்தை போலீஸாரால் கைப்பற்றியதையடுத்து, தையல்நாயகி உட்பட அந்த அலுவலகத்தில் பணியாற்றி வந்த 8 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது..
ஆவண பத்திரம்: நேற்று காலை 8 மணிக்கு தையல்நாயகி வீட்டிற்குள் அதிகாரிகள் நுழைந்தனர்.. காலை 8 முதல் இரவு 8 மணி வரை, கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு மேலாக, அந்த வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, 1 கோடியே 26 லட்சம் மதிப்புள்ளான ஃபிக்ஸட் டெபாசிட் பத்திரங்கள், தங்க பத்திரங்கள், 17 நில ஆவண பத்திரங்கள் போன்றவை தையல் நாயகியின் வீட்டிலிருந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் பறிமுதல் செய்திருக்கிறார்களாம். இதனால் சார் பதிவாளர் அலுவலகங்களில் பரபரப்பு எகிறி வருகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications