பல பெண்களுடன் சகவாசம்.. நெருக்கமா இருந்தாரு.. டிக்டாக் பெண்ணுடன் ஓடியே விட்டார்.. கதறியபடி வந்த பெண்
டிக்டாக் தோழியுடன் மாயமான கணவன் கைது செய்யப்பட்டார்
கடலூர்: "என் புருஷன் பல பொண்ணுங்களோட பழகுறாரு... நெருக்கமாக இருக்காரு.. டிக்டாக் பெண்ணுடன் ஓடியே போய் விட்டார்.. அவரை மீட்டு தாருங்கள்... எல்லாத்துக்கும் காரணம் இந்த டிக்டாக்தான்.. அதனை ஒழிக்க வேண்டும்" என்று இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் தந்திருந்தார்.. இந்நிலையில், டிக்டாக் தோழியுடன் ஓடிப்போன அப்பெண்ணின் கணவனை கடலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மேலிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர்.. 28 வயதாகிறது.. இவரது மனைவி சுகன்யாவுக்கு 25 வயதாகிறது.. 3 வயதில் தர்ணிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் ராஜசேகருக்கு டிக்டாக் மூலம் பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.. நிறைய பெண்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்துள்ளார்.. இதனால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு தகராறு வெடித்துள்ளது.. அதனால் காடாம்புலியூர் ஸ்டேஷனில் சுகன்யா இதுகுறித்து புகார் அளிக்க.. போலீசாரும் கணவரை அழைத்து விசாரணை நடத்தி, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
ஆனால் அவர் அப்போதும் திருந்தவில்லை என தெரிகிறது. சில நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்றவர் திரும்பியும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை போலீசில் சுகன்யா அளித்திருந்த புகாரின்பேரில் விசாரணை செய்யப்பட்டது.. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் டிக் டாக்கில் அதிக ஆர்வம் காட்டிவந்த கவிநயா என்கிற பெண்ணை காணவில்லை என்று அவரது உறவினர்கள் அறந்தாங்கி ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
இதனால் அறந்தாங்கி போலீசார் கவிநயாவின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தபோது அவர் அடிக்கடி ராஜசேகருடன் பேசியது தெரியவந்தது. மேலும், கவிநயாவும், ராஜசேகரும் ஒன்றாக இணைந்து டிக்டாக்கில் வீடியோவையும் வெளியிட்டிருந்ததையும் கண்டனர். இதை கடலூர் போலீசாருக்கு அறந்தாங்கி போலீசார் தகவல் சொன்னார்கள்.
கடலூர் போலீசாரும் இந்த தகவலை சுகன்யாவுக்கு தெரியப்படுத்தினர்.. இதையடுத்து, தன் கணவர் ராஜசேகருக்கு ஏற்கனவே பல பெண்களோடு தொடர்பு உள்ளதாகவும், பல பெண்களை ஏமாற்றி சீரழித்து வருவதாகவும் என்று தெரிவித்ததுடன், குடும்பங்களை சீரழிக்கும் இந்த டிக் டாக் ஆப்பை உடனே தடை செய்ய வேண்டும் என்றார் சுகன்யா ஆவேசத்துடன்.
சுகன்யா அளித்த புகாரின்பேரில் இரு மாவட்ட போலீசாரும் தேடியபோது, ராஜசேகர், கவிநயாவும் சிக்கினர்.. அப்போது கவிநயா போலீசாரிடம் சொல்லும்போது, "ராஜசேகர் தனக்கு திருமணமானதை மறைத்து விட்டார்.. ஆனால் நாங்கள் 2 பேரும் காதலித்துவிட்டோம், கல்யாணமும் செய்துள்ளோம்" என்றார். இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், கவிநயாவின் பெற்றோர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களுடன் கவிநயா பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார்.. மனைவியை ஏமாற்றி இன்னொரு பெண்ணை திருமணம் செய்த ராஜசேகர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை பண்ருட்டி போலீசார் கைது செய்தனர்.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications