பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து.. ஆட்சியர் ஆய்வு.. மேம்பாலம் கட்டுங்கனு கேட்டோமே.. மக்கள் ஆவேசம்!
கடலூர்: கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இந்த விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியம் காரணமா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறிய அவர், அலட்சியமாக செயல்பட்டிருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் தெரிய உள்ளது. ரயில்வே கேட்டை கடக்க முயன்ற ஆச்சாரியா என்ற தனியார் பள்ளிக்கு சொந்தமான பள்ளி வேன் மீது திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் மோதியதில் வேனில் இருந்த பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்தனர்.

ஒரு மாணவி, ஒரு மாணவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ள நிலையில், காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன், தண்டவாளத்தை கடந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறி ஆத்திரமடைந்த பொதுமக்கள் கேட் கீப்பரை தாக்கினர்.
பள்ளி வேன் மீது ரயில் மோதியதால், கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது. சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு பள்ளி வேன் இழுத்து செல்லப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக வேனில் இருந்த மாணவர்களின் புத்தகப் பைகள் தண்டவாளத்தில் சிதறி கிடந்துள்ளது அங்கிருந்த மக்கள் மத்தியில் பதைபதைக்க வைத்திருக்கிறது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கிருந்த மக்கள் ஆவேசமாக ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினர். எத்தனை முறை இங்கு பாலம் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று மனு அளித்த போது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டை முன் வைத்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், கடந்த கிராம சபை கூட்டத்திலேயே பாலம் கட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றி கொடுத்தீர்கள்.
அதன்பின் எங்கள் தரப்பிலும் அதற்காக ஒரு குழு அமைத்து, திட்டம் குறித்த மதிப்பீடு அறிக்கை தயாரித்து அனுமதிக்கு அனுப்பியுள்ளோம். விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களுக்கு பதில் அளித்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து சிபி ஆதித்ய செந்தில்குமார் பேசுகையில், பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்.
ரயில்வே துறை சார்பாகவும், காவல்துறை சார்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்படும். கேட் கீப்பரின் அலட்சியம் இந்த விபத்துக்கு காரணமா என்றும் விசாரணை நடத்தப்படும். விசாரணையில் கவனக் குறைவு காரணமாக இருந்தால், நிச்சயமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இனி எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications