"மொழி தெரியாதவர்களை கேட் கீப்பராக நியமிப்பதால் விபத்து.." கடலூர் வேன் விபத்து.. பொதுமக்கள் ஆவேசம்
கடலூர்: இன்று காலை கடலூரில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் இதுவரை 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் இதற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே கேட் கீப்பருக்கு மொழி தெரியாததே விபத்துக்குக் காரணம் என உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மங்குப்பம் அருகே உள்ள ரயில்வே கேட்டில் இன்று காலை மிக மோசமான விபத்து அரங்கேறியது. இன்று காலை அந்த ரயில்வே கேட்டை பள்ளி வேன் கடக்க முயன்றுள்ளது. அப்போது பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர்.

ரயில் விபத்து
தனியார் பள்ளிக்குச் சொந்தமான வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ரயில் அந்த வேன் மீது மோதியுள்ளது. வேன் மீது ரயில் மோதியதில் ஒரு மாணவி, ஒரு மாணவர் என இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு மாணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது சிகிச்சைப் பலனில்லாமல் உயிரிழந்தார்.
ரயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதாகவும் அப்போது வேன் தண்டவாளத்தைக் கடந்தபோது விபத்து ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மறுபுறம் வேன் டிரைவர் தான் கேட்டை திறக்கச் சொன்னதாகவும் சொல்கிறார்கள். இதில் என்ன நடந்தது என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை. உரிய விசாரணை நடந்தால் மட்டுமே என்ன நடந்தது என்பது தெரிய வரும்.
மக்கள் சொல்வது என்ன
இது குறித்து உள்ளூர் மக்கள் பிரபல டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். அவர்கள் கூறுகையில், "கேட் கீப்பர் உள்ளே தான் இருந்திருக்கிறார்.. விபத்து நடந்தபோது பொதுமக்கள் வந்து பார்த்துள்ளனர். அப்போது கேட் கீப்பர் உள்ளே தான் இருந்துள்ளார். கோபப்பட்ட பொதுமக்கள் கேட் கீப்பரை தாக்கியுள்ளனர். அதன் பிறகே போலீசார் வந்து அவரை பாதுகாத்து உள்ளே வைத்துள்ளனர்.
தமிழ் தெரியாத கேட் கீப்பர்
தமிழ்நாட்டில் தமிழ் தெரியாத இந்திக்காரர்கள், வெளிமாநிலத்தவர்களை வேலைக்குப் போடுவதால் மொழி தெரியாமல் உள்ளூரில் பிரச்சினை ஏற்படுகிறது. மொழி தெரியாததால் என்ன சொல்கிறார்கள் என்பது புரியவில்லை கேட் கீப்பர் படுத்துத் தூங்கிவிட்டான். இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடக்கக்கூடாது என்றால் தமிழ்நாட்டில் தமிழர்களையே வேலைக்குப் போட வேண்டும்.
நமது வலி நமக்கு தான் தெரியும். வெளிமாநிலத்தில் இருந்து வருவோருக்கு அது தெரியாது. விபத்தால் பாதிக்கப்பட்டவர்களும் நாங்கள். ஆனால், போலீசார் விபத்தை ஏற்படுத்தியவருக்கு தான் பாதுகாப்பு கொடுக்கிறது" என்றார்.
விபத்துக்குக் காரணம்
அதேபோல மற்றொரு நபரும் கூட இதே கருத்துகளைத் தான் கூறினார். மொழி தெரியாமல் இருப்போரைக் கேட் கீப்பராக போடுவதே இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணம் என்றனர். மேலும், ரயில்வே கேட்டிற்கு இருபுறமும் இருக்கும் மரங்களை அகற்றியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். அவர்கள் மேலும் கூறுகையில், "இரு பக்கமும் 200 மீட்டர் மரங்களை அகற்றியிருந்தால் ரயில் வருகிறதா என்பது தெளிவாகத் தெரிந்திருக்கும். விபத்தே நடந்திருக்காது. ஆனால், மரங்கள் சூழ்ந்து இருப்பதால் ரயில் வருவது தெரிவதே இல்லை" என்றார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications