அந்த கோலத்தில்.. கையும் களவுமாக பிடித்த கணவன்.. கழுத்தை நெரித்துக் கொன்ற மனைவி.. கடலூர் ஷாக்
கடலூர் : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கழுத்தை நெறித்து கொன்றுள்ளார் மனைவி அவருக்கு உடைந்தையாக கள்ளக்காதலனும் இருந்துள்ளார். இருவரும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் கடலூர் குறிஞ்சி பாடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே மீனாட்சி பேட்டை ஜே. ஜே நகர் பகுதியைச் சேர்ந்த மணிவேல் மகன் முருகன் வயது 37 . இவர் கூலி தொழிலாளி. இவருக்கும் சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இவரது சொந்த அக்கா மகள் வனஜாவுக்கும் கடந்த 9 வருடம் முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இதில் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் கிருஷ்ணகுமாருக்கும் வனஜாவுக்கும் கடந்த ஐந்து வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது தெரியவருகிறது.

கையும் களவுமாக பிடித்தார்
இந்நிலையில் கணவன் பலமுறை கண்டித்தும் கேட்காத வனஜா கடந்த 6-ம் தேதி வனஜா கிருஷ்ணகுமாரும் வீட்டின் அருகிலுள்ள மரவள்ளி தோட்டத்தில் தனிமையில் இருந்துள்ளனர். இதனை அறிந்த முருகன் தனிமையில் இருந்ததை கையும் களவுமாக பிடித்துள்ளனர். பின்னர் மனைவியை திட்டி அடித்துள்ளார். ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமாரும், வனஜாவும் சேர்ந்து கைலியால் நெரித்து கொலை செய்து விட்டு அங்கேயே விட்டுவிட்டு வந்தனர்.

அடக்கம்
பின்னர் இரவு தெருவில் அனைவரும் தூங்கியபின் முருகன் உடலை எடுத்து வந்து வீட்டின் சந்தில் போட்டுள்ளார்கள். காலையில் அக்கம்பக்கத்தினர் கணவர் தடுக்கி விழுந்து இறந்து விட்டார் என்று நாடகமாடி உள்ளார் அதன்பேரில் முருகன் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

பிரேத பிரிசோதனை
இதுகுறித்து அப்பகுதி மக்கள் முருகன் சாவில் சந்தேகம் உள்ளது என்று முருகன் உடம்பில் காயம் உள்ளதாகவும் குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை முடித்து உடலை மீண்டும் கொடுத்தனர்.

வாக்குமூலம்
பின்னர் போலீசார் வனஜாவிடம் விசாரணை செய்ததில் நானும் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் கிருஷ்ணகுமார் கடந்த ஐந்து வருடமாக கள்ளத் தொடர்பு இருந்தோம். இந்நிலையில் முருகன் கடந்த 6ஆம் தேதி எங்களை கையும் களவுமாக பிடித்தார், என்ன செய்வது என்று தெரியாமல் எங்கள் கள்ள தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தோம் என்று ஒப்புக்கொண்டார் அதன் பேரில் குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் வனஜாவையும் கிருஷ்ணகுமாரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்து மனைவி நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications