"நடத்தையில் சந்தேகம்.." மருமகளை ஆசிட் வீசி கொல்ல முயன்ற கொடூர மாமியார்! மிரண்டுபோன விருத்தாசலம்
கடலூரில் மருமகள் மீதே மாமியார் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கடலூர்: கடலூர் அடுத்துள்ள விருத்தாசலத்தில் மருமகள் மீதே மாமியார் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஆசிட் ஊற்றிக் கொல்ல முயன்ற மாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் பெண்கள் மீதான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் கடந்த சில ஆண்டுகளாகப் பெண்கள் மீதான வன்முறை பல மடங்கு அதிகரித்தே இருக்கிறது.
குடும்பத்திலும் கூட பெண்கள் மீதான வன்முறை மோசமானதாகவே இருக்கிறது. இந்தச் சூழலில் கடலூர் மாவட்டம் விருதசாலசத்தில் மருமகளை மாமியாரே கொலை செய்ய முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

குடும்பப் பிரச்சினை
நமது இந்தியாவில் பெரும்பாலும் திருமணத்திற்குப் பிறகு மாமியார்- மருமகள் இடையே பிச்சினை இருந்து கொண்டு தான் இருக்கும். முன்பெல்லாம் இதுபோல வரும் பிரச்சினைகள் பெரிதாக இருக்காது. அதிகபட்சம் வாக்குவாதத்துடன் முடிந்துவிடும். ஆனால், இப்போது சில நேரங்களில் அது கொடூரமான தாக்குதல் சம்பவங்களில் சென்று முடிவடைகிறது. அதுபோல ஒரு சம்பவம் தான் இப்போது கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடந்துள்ளது.

சந்தேகம்
விருத்தாசலம் கடலூர் சாலையில் வசித்து வருபவர் முகேஷ்ராஜ்.. இவருக்கும் கிருத்திகா (23) என்ற பெண்ணுக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகிவிட்டது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும் இருக்கும் நிலையில், முகேஷ்ராஜ் அவிநாசியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். முகேஷ்ராஜ் தாயார் ஆண்டாளுக்கு (55) கிருத்திகாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

ஆசிட் தாக்குதல்
இதனிடையே கிருத்திகா இன்று அதிகாலையில் வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் டாய்லெட்டில் இருந்த ஆசிட்டை எடுத்துத் தூங்கிக் கொண்டிருந்த கிருத்திகா மீது அவரது மாமியார் ஆண்டாள் ஊற்றினார். இதனால் கிருத்திகா அலறி துடித்துள்ளார். இதில் கிருத்திகாவின் முகம், கண், காது, உடல் முழுக்க கடும் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அங்கிருந்த கொசு விரட்டி மருந்தையும் வலுக்கட்டாயமாக வாயில் ஊற்றிக் கொல்ல முயன்றுள்ளார்.

சிகிச்சை
மாமியாரின் இந்த செயலால் பயத்திலும் வலியிலும் கிருத்திகா கத்தியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். ஆசிட் வீச்சால் கிருத்திகாவின் உடல் முழுக்க காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி அளித்தனர். இருப்பினும், பாதிப்பு தீவிரமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காகக் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கைது
அங்கு கிருத்திகாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஆசிட் ஊற்றப்பட்டதில் கிருத்திகாவின் வலது கண் பார்வை இழந்ததைக் கண்டறிந்தனர். கிருத்திகாவுக்கு ஏற்பட்ட காயங்கள் மிக மோசமாக இருக்கிறது. இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால் அங்கிருந்து மீண்டும் புதுவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாமியார் ஆண்டாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications