Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

DMDK Maanadu: தேமுதிக யாருடன் கூட்டணி! இரவு 7 மணிக்கு அறிவிப்பு! எல்.கே.சுதீஷ் பரபரப்பான தகவல்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: வரும் சட்டசபைத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பது இன்று இரவு 7 மணிக்கு கடலூர் மாநாட்டில் அறிவிக்கப்படும் என கட்சியின் பொருளாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்பதை இரவு 7 மணிக்கு கடலூர் மாநாட்டில் வைத்து பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவிப்பார்.

dmdk premalatha vijayakanth

தேமுதிக இடம் பெறும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும். 10 ஆண்டுகளுக்கு பின்னர், விஜயகாந்த் இல்லாமல் ஒரு மிகப் பெரிய மாநாடு நடைபெறுகிறது. அப்போது பொதுமக்கள், கட்சியினர் எதிர்பார்க்கும் கட்சியுடன் கூட்டணி என்பதை அறிவிப்பார். இவ்வாறு சுதீஷ் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் வேப்பூரில் தேமுதிகவின் 'உரிமை மீட்பு மாநாடு' இன்று மாலை கோலாகலமாகத் தொடங்குகிறது. வேப்பூர் அருகே பாசார் கைக்காட்டி தேசிய நெடுஞ்சாலையில், சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0' நடைபெற உள்ளது.

மாநாட்டுத் திடல் முழுவதும் கட்சிக் கொடிகளும், பதாகைகளும், தோரணங்களும் நிறைந்து விழாக்கோலம் பூண்டுள்ளது.

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்பதால், குடிநீர், கழிவறை, மருத்துவ வசதிகள், வாகன நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன்களுக்குத் தனித்தனி பெரிய நிறுத்துமிடங்கள் உருவாக்கப்பட்டு, பாதுகாப்பு அம்சங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 2.30 மணிக்கு மாநாட்டுத் திடலுக்கு வரும் பிரேமலதா விஜயகாந்த், கட்சி கொடியேற்றத்தைத் தொடங்கி வைப்பார். பரதநாட்டியம், நாட்டுப்புறக் கலைகள், இசை, பட்டிமன்றம் போன்ற கலாச்சார நிகழ்வுகள் மாலை வரை நடைபெறும். மாலை 6 மணிக்கு பிரேமலதா தலைமை தாங்கி, மாநாட்டுக்கு முக்கிய உரையாற்றுவார்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேமுதிக எந்த கூட்டணியில் இணையும் என்ற முக்கிய அறிவிப்பை பிரேமலதா தனது உரையில் வெளியிடுவார். கடந்த இரண்டு மாதங்களாக இந்தக் கூட்டணி குறித்த கேள்விகளுக்கு "ஜனவரி 9ஆம் தேதி மாநாட்டில் அறிவிப்போம்" என அவர் கூறி வந்ததால், இம்மாநாடு அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக கட்சிகள் தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசி வருகின்றன. கடந்த தேர்தலில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் வழங்குவதில் அதிமுக கூட்டணியில் எழுந்த சிக்கலால், பிரேமலதாவின் இன்றைய அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

தேமுதிக மீண்டும் அதிமுகவுடன் இணைந்தா, திமுக அணியில் சேருமா, அல்லது நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்துடன் புதிய கூட்டணியை உருவாக்குமா என பல யூகங்கள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளன. பிரேமலதாவின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தை மேலும் சூடுபிடிக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+