செம்மங்குப்பம் ரயில் கேட் கீப்பருக்கு தமிழ் தெரியல! தகவல் பரிமாற்றத்தில் சிக்கல்! திமுகவின் டிமாண்ட்
கடலூர்: கடலூரில் இன்று பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் பலியாகினர். இந்த விபத்திற்கு ரயில்வே கேட் கீப்பர் கேட்டை மூடாததே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. வட இந்தியாவை சேர்ந்த ரயில்வே கேட் கீப்பருக்கு தமிழ் தெரியவில்லை என்பதால் தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட பிரச்சினையே விபத்துக்கு ஒரு காரணமாக அமைந்து இருக்கலாம் என்று திமுக தெரிவித்துள்ளது. மேலும், உள்ளூர் மொழி தெரிந்தவர்களையே இந்த பணிக்கு நியமனம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
கடலூர் செம்மங்குப்பத்தில் நகரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே கேட்டை திறக்க சொன்னதால்தான், கேட்டை திறந்துவிடதாக கேட்மேன் பங்கஜ் சர்மா கூறினார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த பங்கஜ் சர்மாவுக்கு தமிழ் தெரியாது எனக் கூறப்படுகிறது.

தமிழ் தெரிந்தவர்களுக்கு வேலை
ரயில்வே கேட்டை மூடாமல் அலட்சியமாக செயல்பட்டதாலேயே இந்த கோர விபத்து நடைபெற்றதாக நேரில் பார்த்த பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில், இன்று நடைபெற்ற ரயில் விபத்திற்கு மொழி தெரியாமல் இருந்ததும் ஒரு காரணம் என்று திமுக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:-
இந்த பகுதியில் ஏற்கனவே விபத்து நடைபெற்றுள்ளது. தமிழ் மொழி தெரியாததன் காரணமாக அந்த விபத்து நடைபெற்றதாக ரயில்வே அதிகாரிகளே தெரிவித்து இருந்தனர். தற்போது அதே பிரச்சினைதான் மீண்டும் நடைபெற்றுள்ளது. எனவே, இதுபோன்ற மிக முக்கியமான வேலைகளில் உள்ளூர் மொழி தெரிந்தவர்களை நியமிப்பது பலனளிக்கும். இதனால், குறைந்தபட்சம் மக்கள் பாதுகாக்கப்படுவார்கள்" என்று கூறினார்.
பள்ளி வேன் மீது ரயில் மோதியது
கடலூர் அருகே இன்று காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்து உள்ளது. கடலூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்மங்குப்பம் பகுதியில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்த தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று இன்று காலை காலை 7.40 மணிக்கு தண்டவாளத்தை கடக்கும் போது விபத்தில் சிக்கியது.
மாணவி உள்பட 3 பேர் பலி
இந்த வேனை சங்கர் என்ற டிரைவர் ஓட்டி வந்தார். வேனில், 3 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி இருந்துள்ளார். செம்மங்குப்பம் ரயில்வே கேட் திறந்து இருந்ததாக தெரிகிறது. இதனால் டிரைவர் சங்கர் வேனை தண்டவாளத்தை கடந்து செல்ல ஓட்டினார். ஆனால் அந்த சமயத்தில் விழுப்புரத்தில் இருந்து மயிலாடு துறைக்கு செல்லும் பயணிகள் ரயில், வேன் மீது அதிவேகத்தில் மோதியது.
மோதிய வேகத்தில் வேனை ரயில் இழுத்து சென்றது. சுமார் 50 மீட்டர் தூரம் பள்ளி வேன் இழுத்து செல்லப்பட்டதால் அது நொறுங்கி தகர்ந்தது. இந்த பயங்கர விபத்தில் ஒரு மாணவி, 2 மாணவர்கள் உயிரிழந்தனர். வேன் ஓட்டுநர், மற்றொரு மாணவர் காயங்களுடன் தப்பினர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். விபத்துக்கான காரணங்களை கேட்டறிந்தனர்.
ரயில்வே மறுப்பு
முதல் கட்ட விசாரணையில் ரயில்வே கேட் கீப்பர் தூங்கி விட்டதால் கேட்டை மூடவில்லை என்று தெரிகிறது. கேட் மூடாததால் பள்ளி வேன் டிரைவர் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்ததும் தெரிய வந்துள்ளது. ஆனால் இதை தெற்கு ரயில்வே மறுத்துள்ளது.
ரயில்வே கேட் மூடப்பட்டதாகவும், பள்ளி வேன் டிரைவர் சங்கர் கேட்டுக் கொண்டதால் ரயில்வே கேட்டை ஊழியர் திறந்ததாகவும் அதனால் தான் விபத்து ஏற்பட்டு இருக்கிறது என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. எனினும், பங்கஜ்சர்மா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications