1966லிருந்து கட்சிக்காக கொடி பிடிக்கிறேன்! ஆதங்கத்தை பகிர்ந்த திமுக சீனியர்! சமாதானம் செய்த அமைச்சர்
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசிக் கொண்டிருந்த போது, 1966 -லிருந்து கட்சிக்காக கொடி பிடித்து வருகிறேன் என திமுக சீனியர் நிர்வாகி ஒருவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கே.என்.நேரு, பொன்முடி போல் அல்லாமல் அமைச்சர் மா.சுப்ரமணியன் மிகுந்த பொறுமையுடன் அந்த நிர்வாகியை எதிர்கொண்டு சமாதானம் செய்து வைத்தார்.
மேலும், முதியவருக்கு நாற்காலி போட்டு அமர வைக்குமாறு அங்கிருந்த கட்சிக்காரர்களுக்கு அறிவுறுத்தினார்.

கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டம் கார்மாங்குடியில் சுகாதாரத்துறை சார்பில் புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், சுகாதாரத்துறை சார்பாக கடலூர் மாவட்டத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் பற்றி பட்டியலிட்டார். தொடர்ந்து இன்னும் பல்வேறு விவகாரங்கள் பற்றி அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே, மேடைக்கு கீழ் இருந்த கூட்டத்தில் இருந்து ஆதங்க குரல் ஒலித்தது. நான் 1966-லிருந்து திமுகவுக்காக கொடி பிடித்து வருகிறேன் என சீனியர் நிர்வாகி ஒருவர் பெருங்குரலில் முழக்கமிட்டார்.

அமைச்சர் பொறுமை
உடனடியாக அந்த நிர்வாகியிடம் கோபத்தை வெளிப்படுத்தாமல், உங்களை போன்ற உத்தம தொண்டர்களாலும், நிர்வாகிகளாலும் தான் திமுக கட்டிக்காக்கப்படுவதாக பாராட்டி, முதலில் அவரை நாற்காலி போட்டு அமர வைக்குமாறு அங்கிருந்தவர்களுக்கு அறிவுறுத்தினார். கட்சிக்காக இத்தனை ஆண்டுக் காலம் உழைத்த தன்னை நிற்க கூட விடாமல் சிலர் பின்னால் செல்லச் சொன்னதே அந்த பெரியவர் இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்த காரணமாக கூறப்படுகிறது.

அமைச்சர் மா.சுப்ரமணியன்
அமைச்சர் மா.சுப்ரமணியனை தவிர வேறு எந்த அமைச்சராக இருந்திருந்தாலும் அந்த இடத்தில் கோபப்பட்டிருக்க அதிக வாய்ப்புண்டு. கட்சிக்காரரின் நியாயமான ஆதங்கத்தை புரிந்துக் கொண்டதால் அமைச்சர் மா.சுப்ரமணியன் அந்த பெரியவர் மீது கோபப்படவில்லை. அண்மைக்காலமாக அமைச்சர்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவதால் அவர்களுக்கு அறிவுரை நல்கும் விதமாக நேற்றுத் தான் முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள்
கட்சிக்காரர்கள், பொதுமக்கள், வேண்டியவர்கள், வேண்டாதவர்கள், அதிகாரிகள், என பல தரப்பட்டோரையும் அணுசரித்து அரவணைத்துச் செல்வதே அமைச்சராக இருப்பவர்களுக்கு அழகு. அந்த வகையில் இதனை அமைச்சர் மா.சுப்ரமணியன் கடைபிடித்து வருவதால் சர்ச்சைகளில் இருந்து அவர் விலகிக் கொள்கிறார்.
-
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications