கடலூர் காயத்ரி.. உல்லாசத்துக்கு பெண் ரெடி.. விழுந்தடித்து ஓடிய மேனேஜர்.. கிர்ருனு சுத்திய புதுச்சேரி

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் காயத்ரி செய்த காரியத்தினால், கதிகலங்கி போயிருக்கிறார்கள் பொதுமக்கள். இது தொடர்பான விசாரணையையும் போலீசார் முன்னெடுத்து வரும்நிலையில், தஞ்சை, புதுச்சேரி உள்ளிட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. என்ன நடந்தது?

தஞ்சாவூரை சேர்ந்தவர் விக்னேஷ்.. இவர் புதுச்சேரியில் உள்ள பிரைவேட் கம்பெனி ஒன்றில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவரது வாட்ஸ்அப் நம்பருக்கு கடந்த 13-ந்தேதி, "உல்லாசமாக இருக்க பெண் தேவையா?" என்று கேட்டு மெசேஜ் வந்துள்ளது. அத்துடன், அந்த மெசேஜில் நம்பர் ஒன்றும் தரப்பட்டிருந்தது.

prostitution

எனவே, இந்த மேனேஜர், அதிலுள்ள நம்பருக்கு போன் செய்துள்ளார்.. அப்போது மறுமுனையில் பேசிய பெண், 5க்கும் மேற்பட்ட இளம்பெண்களுடைய போட்டோக்களை அனுப்பி, இதில் யாராவது ஒருவரை தேர்வு செய்யுங்கள் என்றாராம்.

புகைப்படம்: விக்னேஷும் ஒரு பெண்ணின் புகைப்படத்தை தேர்வு செய்து அனுப்பி உள்ளார். பிறகு ஒரு இரவுக்கு 10 ஆயிரம் ரூபாய் ரேட் பேசி முன்பணமாக ரூ.5 ஆயிரத்தை ஜிபே மூலமாக அந்தப்பெண் பெற்றுள்ளார்.

பிறகு, முத்தியால்பேட்டையில் ஒரு இடத்தை குறிப்பிட்டு அங்கு வந்து காத்திருக்கும்படி அப்பெண் கூறியிருக்கிறார்.. இதனால் ஆசை ஆசையாக, விக்னேஷ் அங்கு சென்றும்கூட, அந்த பெண் வரவில்லை.. இப்படியே 5 மணி நேரம் அதே இடத்தில் காத்து நின்றார்.. அதற்கு பிறகுதான் தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்த விக்னேஷ், உடனடியாக சைபர் கிரைம் போலீசுக்கு சென்று புகார் தந்தார்.

வங்கி கணக்கு: இதையடுத்து, சைபர் கிரைம் போலீசாரும், சம்பந்தப்பட்ட பெண்ணின் வங்கி கணக்கு மற்றும் அவர் தொடர்பு கொண்ட எண் ஆகியவற்றை வைத்து, விசாரணை மேற்கொண்டபோதுதான், இவ்வளவு துணிச்சல் மிகுந்த காரியத்தை தனிநபராக செய்து வருவது காயத்ரி என்ற பெண் என்பது தெரியவந்தது. இந்த பெண் கடலூரை சேர்ந்தவர்.. 35 வயதாகிறது.. கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட ஆண்களை, இதுபோலவே ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளார் காயத்ரி..

சோஷியல் மீடியாவில் இன்ஸ்டாகிராமில் பெண்களின் போட்டோக்களை டவுன்லோடு செய்துக்கொண்டு, இப்படியான மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக போலீசாரிடமும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.. இதையடுத்து அவரை, புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பாலமுருகன் முன்னிலையில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

விசாரணை: பிறகு, காயத்ரியின் வங்கி கணக்கை அதிகாரிகள் சோதனையிட்டனர்.. அதில், கடந்த 6 மாதங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து ரூ.5 ஆயிரம், ரூ.2 ஆயிரம் என 4 லட்சம் ரூபாய்க்கு மேல் வந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பெண் ஆசையை காட்டியே, லட்சக்கணக்கில் மோசடி செய்திருக்கும் காயத்ரியிடம் தொடர் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+