மோசமான வானிலை.. கடலூர் மீனவர்களே உஷார்.. கடலுக்கு செல்ல தடை போட்ட மீன்வளத்துறை!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: வங்கக்கடலில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இன்று பிற்பகல் முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கடலூர் மாவட்ட மீனவர்களுக்கு மீன்வளத்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி எடுத்தது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் தென்மேற்கு பருவழை ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதானது.

Due to bad weather Cuddalore fishermen bans to enter sea, says Fisheris department

இந்நிலையில் தான் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இன்று கூலாக வானிலை நிலவியது.

இதற்கிடையே தான் தமிழக வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய விஷயத்தை கூறியது. அதாவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமா வரும் புதன்கிழமை வரை தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே தான் இன்று கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் மிதமான மழை பெய்தது. இதற்கிடையே தான் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கு பிறப்பக்கப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக வங்கக் கடல் பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசும். இதுபற்றி வானிலை மையம் எச்சரித்துள்ளதால் கடலூர் மாவட்ட மீனவர்களும் அனைத்து வகை மீன்பிடி படகுகளும் இன்று பிற்பகல் முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் கடந்த 2 மாதமாக மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்தனர். இந்த தடைக்காலம் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தான் மீன்டும் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இதற்கிடையே தான் தற்போது மோசமான வானிலையால் கடலூர் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+