சர்வர் பிரச்சனையால் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் ரத்து.. பொதுமக்கள் அவதி
கடலூர்: தமிழ்நாடு முழுவதுமே சர்வர் பிரச்சனையால் ரேஷன் கடைகளில் நேற்று அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் நிறுத்தப்பட்டதால் ஏராளமான பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.இன்று முதல் பொங்கல் பரிசு மட்டுமே வழங்கப்படுகிறது என்பதால்,இனி பொங்கல் முடிந்து தான் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது,
கடலூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 85 ஆயிரத்து 994 குடும்ப அட்டைதாரர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு மாவட்டத்தில் உள்ள 1,458 ரேஷன் கடைகள் மூலமாக அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்து வருகிறது கூட்டுறவுத்துறை. கடலூர் மாவட்டத்தில் கைரேகை வைக்காமல் ரேஷனில் எதுவும் வாங்க முடியாது. அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் எந்திரம் மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பயோமெட்ரிக் எந்திரத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் ஸ்கேன் செய்யப்படுவதோடு குடும்பத்தலைவரின் விரல்ரேகையும் பதிவு செய்யும்போது அடிக்கடி செயல்படாததால் பொருட்கள் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இந்த பிரச்சினை அடிக்கடி நடப்பதால், ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் அவதிப்படும்நிலை ஏற்படுகிறது. மேலும், கடை ஊழியர்களும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடலூரில் நேற்று பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க ரேஷன் கடைகளுக்கு சென்ற போது, வழக்கம் போல் சர்வர் பிரச்சனையால் பயோமெட்ரிக் எந்திரத்தில் ஸ்மார்ட் கார்டுகள் பதிவாகவில்லை. இதனால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்ய முடியாத நிலை எழுந்தது. இந்த பிரச்சனை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள்.
இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு இன்னும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்திருக்கிறார்கள்.இனி பொங்கல் பண்டிகை முடிந்தது கிட்டத்தட்ட 18ம் தேதிக்கு பிறகே அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வாங்க முடியும்.
கடலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இன்று சர்வர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படவில்லை. ரேஷன் கடை ஊழியர்கள் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சர்வர் பிரச்சினை நேற்று இரவுக்குள் சரி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. அதனால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் எவ்வித பாதிப்பும் இன்று ஏற்படவில்லை.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications