தேர்வு நடக்கும் போதே உயிரிழந்த தந்தை.. தாங்க முடியாத துயரத்திலும் சாதித்த பிளஸ் டூ மாணவி.. சபாஷ்!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: இயற்பியல் தேர்வு நடைபெற இருந்த அன்று தந்தையை பறிகொடுத்த போதும், மனம் தளராமல் தேர்வு எழுத சென்ற கடலூரை சேர்ந்த மாணவி, இன்று வெளியான தேர்வு முடிவில் நல்ல மதிப்பெண்களுடன் பாஸ் ஆகியுள்ளார். தனது தந்தையின் கனவை நிறைவேற்றுவதே தனது லட்சியம் என்று கூறினார்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தின் கீழ் ப்ளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில், மாணவர்களை விட மாணவியர்களே அதிகளவில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். மார்ச் ஒன்றாம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்றது.

Even after the death of her father on Exam Day Cuddalore Girl Not Give Up and got good marks in Plus Two

இந்த தேர்வை மொத்தம் 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவர்கள் எழுதினர். 4,08,440 மாணவிகளும், மூன்று லட்சத்து 52 ஆயிரத்து 165 மாணவர்களும் அடங்குவர். பிளஸ் 2 பொதுத்தேர்வில் பல்வேறு சவால்களையும் கடந்து மாணவ மாணவிகள் பலரும் சாதித்துள்ளார்கள். குறிப்பாக நாங்குநேரியில் சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவர், பிளஸ் டூவில் 469 மதிப்பெண் பெற்று சாதித்து காட்டினார்.

இதேபோல தமிழகம் முழுவதும் பல்வேறு சவால்களை கடந்து கல்வி என்ற ஆயுதத்தால் தங்கள் கஷ்டங்களை தாண்டி சாதித்துள்ளதை பார்க்க முடிகிறது. அந்த வகையில், இயற்பியல் தேர்வு அன்று தந்தையை பறிகொடுத்த மாணவி, தாளாத துயரத்திலும் தேர்வு எழுதி சாதித்துள்ளார். இது குறித்து கடலூரை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பிளஸ் டூ மாணவி கூறியதாவது:

என்னோட பெயர் ராஜேஸ்வரி.. இயற்பியல் தேர்வு நடக்கும் போது என்னோட தந்தை இறந்து விட்டார். தேர்வு நடக்க இருந்த அன்று காலையில் 3 மணிக்கு இறந்துவிட்டார். அதனால், நான் தேர்வு எழுத வேண்டாம் என நினைத்தேன்.. அப்போது என் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் என்னிடம் சொன்னது என்னவென்றால்.. உங்க அப்பா ஆசையே நீ நல்லா படிச்சி..நல்ல இடத்திற்கு வரவேண்டும் என்பதுதான்..என்று சொன்னார்கள்.

அதனால், நான் தேர்வு எழுதினேன். நான் படித்தது எல்லாம் நியாபகம் இருக்கும் என்று என் பிரண்ட்ஸ், ஆசிரியர்களும் சொன்னார்கள். எனக்கு படித்தது எல்லாமே நியாபகம் இருந்தது. இயற்பியல் தேர்வில் நான் 70 மதிப்பெண் எடுத்துள்ளேன். மொத்தமாக 474 எடுத்துள்ளேன். அரசு வேலையில் நான் இருக்க வேண்டும் என்பதுதான் என் தந்தையின் கனவு..

எனவே ஒரு டிகிரி முடிச்சிட்டு எக்ஸாம் எழுதி அரசு வேலைக்கு போக வேண்டும் என்று தோனுது.. எங்க அப்பாவோட ஆசையை நான் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். எங்க அப்பா என்னிடம் அடிக்கடி ஒன்று சொல்வார்.. நம்ம கிட்ட இருக்கிறதை வச்சி நாலுபேருக்கு உதவுனும்.. நம்ம கிட்டையே எல்லாம் இருக்க கூடாது என்பார்..

அதைபோல என்னால முடிந்ததை நாலு பேருக்கு செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.. நான் காரேத்தேவிலும் மாநில அளவில் விளையாடி முதல் பரிசு பெற்று இருக்கிறேன். டிகிரி முடிச்சிட்டு அரசு வேலைக்கு போக வேண்டும் என்பதுதான் எனது கனவு. எங்க அப்பா ஆசைப்பட்ட படி அரசு வேலைக்கு போயிட்டு நல்லது செய்வேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+