பிள்ளை போல் வளர்த்த முந்திரி மரங்கள்.. கண்ணீர் மல்க, துண்டு துண்டாக வெட்டும் கடலூர் விவசாயிகள்
கடலூர்: கடலூரில் பிள்ளை போல் வளர்த்த முந்திரி மரங்களை விவசாயிகள் துண்டு துண்டாக வெட்டினார்கள். இந்த வருடம் சுத்தமாக விளைச்சலும் இல்லை.. விளைந்த முந்திரிக்கு விலையும் இல்லை என்று கூறி விவசாயிகள் கண்ணீர் மல்க மரங்களை வணங்கிவிட்டு வெட்டிய காட்சிகள் காண்போரை கலங்க வைத்துள்ளது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம், பண்ருட்டி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு முந்திரி சாகுபடிதான் முக்கிய வாழ்வாதாரமாகத் திகழ்ந்து வந்தது. கடலூர் மாவட்டம் மட்டுமல்ல, அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை போன்ற பகுதிகளில் அதிக அளவில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இதில் விவசாயிகள் ஆண்டுக்கு ஒரு முறை முந்திரிக் கொட்டை அறுவடை செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஒரு முறை நடவு செய்து, பல ஆண்டுகளுக்கு வருமானம் பார்த்து வந்தார்கள். தோட்டக்கலைத்துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் முந்திரி சாகுபடியை 2½ ஏக்கரில் செய்யும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமான ரூ.18 ஆயிரத்தில் ஒட்டுச்செடிகள், இடுபொருட்கள் வழங்கப்படும். இதேபோல் பழைய தோப்பு புதுப்பித்தல் என்ற திட்டத்தின் கீழ் 2½ ஏக்கருக்கு மானியத்தில் ரூ.25,200 மதிப்புள்ள நடவு பொருட்கள் வழங்கப்படும். இந்த மானியத்தின் மூலம் விவசாயிகள் பலரும் முந்திரி சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் செலுத்தி வந்தார்கள்.
மற்ற பயிர்களை காட்டிலும் முந்திரி சாகுபடி செய்வதால் எதிர்பார்க்கும் லாபம் கிடைத்து வந்தது. ஒரு மரத்தில் இருந்து சுமார் 5 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ஒரு ஏக்கரில் இருந்து 10 மூட்டை வரை அறுவடை செய்து வந்தார்கள். ஒரு மூட்டையில் குறைந்தபட்சம் 80 கிலோ வரை இருக்கும். மூட்டை ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.8,500 முதல் ரூ.12 ஆயிரம் வரை விலை போனது. இந்நிலையில் தென்னை போல் ஆண்டுதோறும் வருமானம் ஈட்டிவந்த முந்திரி விவசாயிகள் இப்போது விலை இல்லாத காரணத்தால் கலங்கி போய் இருக்கிறார்கள்.
கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் புயல், வறட்சி, பனிப்பொழிவு போன்ற பல்வேறு காரணங்களால் முந்திரி சாகுபடி குறைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.. சரியான மகசூலும் இல்லாமல், முந்திரியின் விலையில் ஏற்றமும் இல்லாததால், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே இருசாளகுப்பம், கோட்டேரி,நடியப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் மாற்றுப்பயிருக்கு மாறும் விவசாயிகள், கண்ணீருடன் முந்திரி மரங்களை வெட்டி வருகின்றனர்.
இதுபற்றி விருத்தாச்சலம் விவசாயி ஒருவர் கூறுகையில், கடலூர் மாவட்டம் முழுவதுமே முந்திரி தான் வாழ்வாதாரம். அதை நம்பி தான் விவசாயிகள் இருக்கிறார்கள்.. ஆனால் விளைவித்த முந்திரிக்கு இந்த பக்கம் எங்குமே உரிய விலை கிடைக்கவில்லை.. காய்ப்பதில் ஒரு பக்கம் பிரச்சனை இருந்தாலும், விலையும் சுத்தமாக இல்லை.. இதனால் எங்கள் வாழ்வாதாரம், பாதிக்கிறது. கிட்டத்தட்ட 10 ஏக்கர் முந்திரியை நாங்கள் பயிரிட்டு இருக்கிறோம்..
ஒரு முந்திரி கன்றை உற்பத்தி செய்து அதை விளைச்சலுக்கு கொண்டு வர 10 அல்லது 15 வருடங்கள் ஆகிறது. எங்களுக்கு வெட்டுவதற்கு மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை.. விலை வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளது. எனவே இதை வெட்டிவிட்டு வேறு மகசூல் போடுவதற்கான வேலையில் ஈடுபட உள்ளோம். முன்பு முந்திரி 13000 அல்லது 14000 ரூபாய்க்கு போன மூட்டையை இப்போது 4000க்கு கூட எடுக்க மாட்டேன் என்கிறார்கள்.. வெளிநாட்டில் இருந்து முந்திரி கொட்டைகள் இறக்குமதி ஆவதால் எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது" இவ்வாறு வேதனையுடன் கூறினார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications