தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த பக்தர்! தாவி பிடித்து காப்பாற்றிய 'முகமது'.. மதமென பிரிந்தது போதும்
கடலூர்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவின்போது தீயில் விழுந்த பக்தரை உடனடியாக தீயணைப்பு படை வீரர் முகமது சல்மான் துரிதமாக செயல்பட்டு மீட்டுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சல்மானுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
டெல்டாவின் தொடக்கமாக இருக்கும் மாவட்டம்தான் கடலூர். தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளை போலவே இதுவும் வெயில் நிறைந்த ஒரு பகுதிதான். சம்மர் சீசனில் வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிடும். எனவே கோடைக்கால வெப்ப நோய்களும் பரவ தொடங்கிவிடும். இதை தடுக்க மழை வேண்டி அம்மனை வழிபடுவார்கள். அப்படி வழிப்படப்படும் மிகவும் சக்திவாய்ந்த அம்மன்களில் ஒன்றுதான் கடலூர் மாவட்டம் சிதம்பரம் கீழத்தெருவில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற கீழத்தெரு மாரியம்மன் கோயில்.

மற்ற கோயில்களை போலவே இந்த கோயிலிலும் ஆண்டு தோறும் பக்தர்கள் திருவிழா நடத்தி தீ மிதித்து, அம்மனுக்கு பால்குடம் எடுப்பார்கள். இதன் மூலம் அம்மனை குளிர வைத்து மழை பெய்ய வைப்பதுதான் இதன் நோக்கம். இந்நிலையில் இந்த ஆண்டும் ஜூலை மாதம் 21ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா தொடங்கியது. தெருவடைச்சான் உற்சவம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உற்சவம் நடைபெற்றது.
இதனையடுத்து 30ம் தேதியன்று தேர் திருவிழா நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக 31ம் தேதியன்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் விரதமிருந்து அக்னியில் இறங்கினர். இந்நிலையில் இந்த தீமிதி சம்பவத்தின்போது பக்தர் ஒருவர் தலைக்குப்புற தீயில் விழுந்துள்ளார். சுற்றி நின்ற மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் வேடிக்கை பார்க்க, உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு படை வீரர் முகமது சல்மான் அவரை போராடி மீட்டிருக்கிறார்.

மற்ற வீரர்கள் அந்த பக்தரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்திருக்கின்றனர். இந்நிலையில் பக்தரை மீட்ட முகமது சல்மானை அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர். "வடக்கே சீருடை அணிந்தவர்கள் மத்தியிலும் வெறுப்பின் விஷம் விதைக்கப்படும் சூழலில், தமிழ்நாட்டின் பெருமையை பறைசாற்றிய நிகழ்வு" இது என சிபிஎம் பாராட்டு தெரிவித்திருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications