கொடிமர பிரச்சனை.. சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் - அதிகாரிகள் வாக்குவாதம்! போலீஸ் தலையீடு

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொடிமரத்தை புதுப்பிக்க தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொடிமரத்தை புதுப்பிப்பதற்கான பூஜைகள் நடந்த நிலையில் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் உருவானது. இதையடுத்து டிஎஸ்பி தலைமையில் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்திப்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவில் தான் ‛பூலோக கைலாயம்' என போற்றப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடப்பது வழக்கம்.

chidambaram nataraja temple

குறிப்பாக ஆனி திருமஞ்சனம் விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா இங்கு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் அடிக்கடி சர்ச்சையை கிளப்பும். இங்குள் தீட்சிதர்களின் செயல்பாடுகளும் அடிக்கடி விவாதத்தை கிளப்பும்.

இந்நிலையில் தான் இன்று இரவு சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதாவது கோவிலில் உள்ள கொடிமரத்தை புனரமைக்கும் அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கான நடவடிக்கையை எடுத்து வந்தனர். கொடிமரத்தை புனரமைப்பதற்கான பூஜைகள் கோவிலில் செய்ய முற்பட்டபோது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

chidambaram nataraja temple

அதேவேளையில் அறநிலையத்துறை அதிகாரிகள் கொடிமரத்தை புனரமைப்பதில் மும்முரம் காட்டினர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தை தொடர்ந்து சிதம்பரம் போலீசார் தலையிட்டு பிரச்சனைகளை பெரிதாகாமல் தடுத்தனர். அதுமட்டுமின்றி அறநிலையத்துறையினர் மற்றும் தீட்சிதர்கள் என இருதரப்பையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

chidambaram nataraja temple

இந்த பேச்சுவார்த்தை இரவிலும் தொடர்ந்து வருகிறது. இதனால் சிதம்பரம் நடராஜர் கோவிலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் தற்போது சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+