பள்ளி வேன் விபத்தில் திருப்பம்.. கேட் மூடவே இல்லை.. கேட் மேன் பொய் சொல்கிறார்! வேன் டிரைவர் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

கடலூர்: நான் கேட் கீப்பரிடம் எதுவும் பேசவில்லை. ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது என்று பள்ளி வேன் டிரைவர் சங்கர் பேட்டி அளித்துள்ளார். கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது.

இது தொடர்பாக காயம் அடைந்த பள்ளி வேன் டிரைவர் சங்கர் பேட்டி அளிக்கையில், நான் கேட் கீப்பரிடம் எதுவும் பேசவில்லை. கேட் திறந்துதான் இருந்தது. நான் திறக்க சொல்லவே இல்லை.. நான் அப்படி சொல்லவே இல்லை.. நான் அவரை பார்க்கவே இல்லை.. நான் போகும் போது கேட் திறந்துதான் இருந்தது.. கேட் கீப்பர் பொய் சொல்கிறார் என்று டிரைவர் சங்கர் தெரிவித்துள்ளார்.

cuddalore accident

மேலும், ரயில்வே நிர்வாகம் வட இந்தியர்களை பல மாநிலங்களில் நியமித்துள்ளது. அவர்கள் மொழி தெரியாத காரணத்தால் பல தவறுகளை செய்கின்றனர். அவர்களுக்கு தமிழ் மொழி தெரியாததால் குழம்புகின்றனர். அவர்களின் செயலால்தான் வட இந்தியாவை போலவே இங்கேயும் விதிமீறல்கள் நடப்பதாக மக்கள் விமர்சனம் செய்கின்றனர்.

ரயில் மோதி பள்ளி வேன் விபத்து - விளக்கம்

ரயில் மோதிய வேகத்தில் பள்ளி வேன் சுமார் 50 மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்டது. இதுகுறித்து ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், கேட் கீப்பர் கேட்டை மூட முயன்றபோது, டிரைவர் அவசரப்படுத்தி தண்டவாளத்தை கடந்து செல்ல வற்புறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

கடலூர் செம்மங்குப்பம் லெவல் கிராசிங்கில் ரயில்வே கேட்டை உரிய நேரத்தில் மூடாத கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ரயில் வருவது தெரிந்தும் வேன் டிரைவர் கூறியதை கேட்டு ரயில்வே கேட்டை திறந்ததே விபத்திற்கு காரணம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஆனால் இதை டிரைவர் தற்போது மறுத்துள்ளார். உள்ளே இருந்த மாணவர்களும் ட்ரைவர் அப்படி எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை என்று உறுதி செய்துள்ளனர். அதாவது டிரைவர் கேட்டை மூட வேண்டாம் என்று சொல்லவில்லை என்று விளக்கம் அளித்துள்ளனர்.

ரயில் பள்ளி வேன் விபத்து

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். ஆச்சாரியா என்ற தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன், ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது இந்த விபத்து நேரிட்டது. திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில், வேனில் இருந்த பள்ளி குழந்தைகள் மீது மோதியதில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு மாணவியும், ஒரு மாணவனும் உயிரிழந்தனர். மேலும், காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதற்கட்ட தகவல்களின்படி, கேட் கீப்பர் தூங்கியதால் கேட்டை மூடாமல் இருந்ததாகவும், இதனால் வேன் தண்டவாளத்தை கடந்தபோது விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கேட் கீப்பரை தாக்கினர்.

அதிகாரிகள் விரைந்தனர்

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்து நடந்த நிலையில், திருச்சி ரயில்வே எஸ்.பி. ராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினார். மேலும், திருச்சி மற்றும் சென்னை ரயில்வே பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளும், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகனும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

கடலூர் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் கடலூர் - மயிலாடுதுறை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மேலும், ரயில் மோதியதில் வேன் உருக்குலைந்ததால் பலி எண்ணிக்கை உயரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

கடலூர் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+