ஸ்டுடியோ ஓனருடன் ஓவர் நெருக்கம்.. மனைவியின் கள்ளக்காதலனை பழிதீர்த்த கணவர்.. அலறிய கடலூர்

குறிஞ்சிப்பாடி ஸ்டுடியோ ஓனர் கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் ஸ்டுடியோ ஓனர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிஞ்சிப்பாடியின் சுப்பராயலு பகுதியை சேர்ந்தவர் முருகவேல் மகன் சுந்தரமூர்த்தி(38). இதே பகுதியில் இயங்கி வரும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே ஸ்டுடியோ ஒன்றை வைத்து நடத்தி வந்திருக்கிறார். இந்நிலையில் வழக்கம் போல வேலை முடித்துவிட்டு கடந்த 1ம் தேதி இரவு 9 மணியளவில் பைக்கில் வீடு திரும்பியுள்ளார். பைக் கழுதை ஓடை பாலம் அருகே வந்தபோது இருட்டில் மறைந்திருந்த சிலர் சுந்தரமூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சுந்தரமூர்த்தி அதே இடத்தில் துடித்துக்கொண்டிருந்ததை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு சுந்தரமூர்த்தி அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

கொலை

கொலை

இதனையடுத்து சுந்தரமூர்த்தியின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்த வந்தனர். அதேபோல இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டறிய தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் சுந்திரமூர்த்திக்கு எதிரிகள் யாரும் இல்லையென்பது தெரிய வந்தது. எனவே விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் சுந்தரமூர்த்தியின் நண்பர்களிடம் விசாரிக்கையில் இவருக்கும் ஒரு மளிகை கடைக்காரருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்தது தெரிய வந்தது.

திருமணத்தை மீறிய உறவு

திருமணத்தை மீறிய உறவு

அதேபோல சுந்தர மூர்த்தியின் செல்போனிலிருந்து சில மாதங்களுக்கு முன்னர் மளிகை கடை வைத்திருக்கும் ஏழுமலையின் மனைவிக்கு அடிக்கடி அழைப்புகள் சென்றிருப்பது தெரிய வந்தது. ஆனால் தற்போது ஏழுமலையின் மனைவி உயிருடன் இல்லை. எனவே விசாரணையில் மீண்டும் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் ஏழுமலையிடம் விசாரிக்கலாம் என்று காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அப்போதுதான் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ஏழுமலையின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னர் சுந்தரமூர்த்தியின் ஸ்டுடியோவுக்கு போட்டோ எடுக்க சென்றிருக்கிறார்.

தற்கெலை

தற்கெலை

அப்போது இருவருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நட்பு நாளடைவில் திருமணத்திற்கு மீறிய காதலாக வளர்ந்திருக்கிறது. எனவே இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டனர். இந்த விவகாரம் ஒரு கட்டத்தில் ஏழுமலைக்கு தெரிய வரவே ஏழுமை தனது மனைவியை கண்டித்திருக்கிறார். இதனால் மனமுடைந்த அப்பெண் தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து தனது மனைவியின் மரணத்திற்கு சுந்தரமூர்த்திதான் காரணம் என்று ஏழுமலை பழிவாங்க துடித்துக்கொண்டிருந்தார். இப்படியாக கூலிப்படையை ஏவி சுந்தரமூர்த்தியை கொலை செய்திருக்கிறார்.

கைது

கைது

இதனையடுத்து ஏழுமலை மற்றும் கொலை செய்த கூலிப்படையினர் இருவர் என மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தற்கொலை செய்துகொண்டு இறந்துபோன தனது மனைவியின் காதலனை கணவர் கூலிப்படை கொண்டு கொலை செய்துள்ள சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+