நாடாளுமன்ற தேர்தல்.. சிதம்பரம் தொகுதிக்கு மீண்டும் அடி போடும் திருமா.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க
கடலூர்: வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடுவேன் என்று தொல் திருமாவளவன் கடலூரி செய்தியாளர்களை சந்தித்த போது கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் நாடளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லாத நிலையில், தற்போதே அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளையும் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்தும் இலைமறைக்காயாய் பேசத்தொடங்கிவிட்டனர். அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் சிதம்பரம் மக்களவை தொகுதியில் தான் போட்டியிட இருப்பதாக தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் தற்போது சிதம்பரம் தொகுதி எம்.பியாகவே உள்ளார். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போராடி வெற்றி பெற்றிருந்தார். சிதம்பரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரனை விட 3,219 வாக்குகள் கூடுதலாக பெற்று திருமாவளவன் வெற்றி பெற்றிருந்தார். அதாவது 5,00,229 வாக்குகளை பெற்று இருந்தார்.
இந்த நிலையில், மீண்டும் சிதம்பரம் தொகுதியை திருமாவளவன் குறி வைத்து இருப்பது அவரது பேட்டி மூலம் ஊர்ஜிதமாகியுள்ளது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியதாவது:- சிதம்பரம் தொகுதியில் தான் மீண்டும் நான் போட்டியிட இருக்கிறேன். இதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. நடராஜர் கோவிலில் நடக்கும் பிரச்சினைகளுக்கு அரசும் சட்டமும் சொல்வதற்கு தீட்சதர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
கோவிலில் நடக்கும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும். திரையுலக நட்சத்திரங்களை முன்னிறுத்தியே பிரச்சாரம் செய்யும் நிலை உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் சினிமா நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆந்திராவில் என்டிஆர் அரசியலுக்கு வந்தார். ஆனால் மற்ற மாநிலங்களில் எந்த சூப்பர்ஸ்டாரும் வரவில்லை. சினிமாவில் இருக்கும் செல்வாக்குடன் அரசியலுக்கு வந்துவிடலாம் என மற்ற மாநிலத்தில் யாரும் செயல்படவில்லை.
இந்த விமர்சனங்களைத்தான் நான் முன்வைத்தேனே தவிர நடிகர் விஜய்க்கு எதிராக விமர்சனங்களை நான் முன் வைக்கவில்லை. இது பொதுவான விமர்சனம். பொது வாழ்வுக்கு எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வரலாம். திரைத்துறையில் நடிப்பவர்களை முதல்வராக தேடும் நிலை தமிழகத்தில் மட்டுமே உள்ளது. விஜய் அரசியலுக்கு வருவதை நான் எதிர்க்கவில்லை. வரவேற்கிறேன்" என்றார்.
திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிட இருப்பதாக தனது விருப்பத்தை வெளிப்படுத்தினாலும் திமுக கூட்டணியில் அவருக்கு அங்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது தேர்தல் நெருங்கும் போது கூட்டணியில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையிலேயே திருமாவளவனின் விருப்பம் நிறைவேறுமா? இல்லையா? என்பது தெரியும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications