கடலூரில் ஒரே நாளில் 214 பேர் டிஸ்சார்ஜ்.. மருத்துவக்குழு சாதனை
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 416 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 214 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போதும் கடலூர் மாவட்டத்தில் ஆரம்ப காலத்தில் சில நாட்கள் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாகவே இருந்து வந்தது. கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவிடக்கூடாது என்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.


இருப்பினும் டெல்லி மத மாநாடு, வெளி மாநிலத்திற்கு சென்று திரும்பிய 26 பேர் முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பின்னர் சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் திரும்பியவர்களால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. அதுமட்டுமல்லாமல் பயிற்சி பெண் காவலர்கள் 10 பேர் உள்ளிட்ட 14 போலீசாருக்கு ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடு கிடுவென உயர்ந்து, இதுநாள் வரை மொத்தம் 416 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் பெண் ஒருவர் இறந்துள்ளார். நேற்று பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில், யாருக்கும் பாதிப்பு இல்லை.


இந்நிலையில் கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைகளிலும், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 214 பேர் இன்று ஒரே நாளில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு மாவட்டத்தில் ஒரே நாளில் அதிகளவிலான கொரோனா நோயாளிகள் வீடு திரும்புவது இதுவே முதல்முறையாகும். மேலும் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 416 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்றுடன் சேர்த்து மொத்தம் இதுவரை 250 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 166 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கடலூர் மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 351 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டதில் 416 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதும், 7 ஆயிரத்து 826 பேருக்கு நோய்த்தொற்று இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.


-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications