மறக்கப்பட்ட வீர மங்கை.. ஆங்கிலேயரை துணிச்சலாக எதிர்த்த தமிழக ஜான்சிராணி அஞ்சலை அம்மாள்!
கடலூர்: நாட்டின் விடுதலைக்காக இன்னுயிரை தந்த பல தியாக செம்மல்களில் ஒருவர் தான் கடலூரை சேர்ந்த வீர பெண்மனி அஞ்சலை அம்மாள். காந்தியடிகளால் தென்னாட்டு ஜான்சிராணி என பாராட்டப்பெற்ற அஞ்சலை அம்மாள் சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சிறைவாசம் சித்ரவதைகளை அனுபவித்தார். சுதந்திர தின பேச்சு போட்டி பங்கேற்க ரெடியாகும் மாணவர்களுக்கு இவரது வாழ்க்கை வரலாறு கண்டிப்பாக பயன்படுத்ததக்கதாகும்.
ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த நம் தாய்நாட்டை மீட்பதற்காக பலரும் பெரும் போராட்டம் நடத்தினர். சிறைவாசம், உயிர் தியாகம் என பல தியாகங்களை செய்த தியாக செம்மல்களின் வீர வரலாறுகளை சுதந்திர தினத்தில் நினைவு கூர வேண்டியது அவசியம்.. நாட்டின் விடுதலைக்காக இன்னுயிரை தந்த பல தியாக செம்மல்களின் வரலாறு பூமிக்குள் புதைந்து இருக்கும் புதையலை போன்றுதான் உள்ளது.

அஞ்சலை அம்மாள்: இந்த வரிசையில் கடலூரை சேர்ந்த வீர பெண்மனி அஞ்சலை அம்மாளும் ஒருவர். காந்தியடிகளால் தென்னாட்டு ஜான்சிராணி என பாராட்டப்பெற்ற அஞ்சலை அம்மாள் சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சிறைவாசம் சித்ரவதைகளை அனுபவித்தார். தமிழகத்தில் ஒத்துழையாமை இயக்கத்தை முன்னின்று நடத்தினார். அஞ்சலை அம்மாளின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் தேச விடுதலைக்காக ஆற்றிய பங்கு குறித்தும் இங்கே பார்க்கலாம்.
1890 ஆம் ஆண்டு அன்று கடலூரில், அஞ்சலை அம்மாள் பிறந்தார். முருகப்பா என்பவரை 1908-இல் திருமணம் செய்து கொண்டார். இளம் வயதிலேயே அரசியல் பற்றியும் ஆங்கிலேயரின் அடக்குமுறை பற்றியும் அறிந்து கொண்ட அஞ்சலை அம்மாள் சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவரது கணவரும் அஞ்சலை அம்மாளுக்கு தக்க உறுதுணையாக இருந்து போராட்டங்களில் பங்கேற்றார்.
பாரதியாரால் பாராட்ட பெற்றவர்: அஞ்சலை அம்மாள் - முருகப்பா தம்பதி நெசவுத் தொழிலையே முதன்மையாக செய்து வந்தனர். சென்னையில் சைதாப்பேட்டைக்கு குடிபெயர்ந்த அஞ்சலை அம்மாள் தறி நெசவுப்பணியோடு காங்கிரசில் இணைந்து கட்சிப்பணியும் செய்தார். மகாத்மா காந்தி ஆங்கிலேயருக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார். 1921 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி என்ற சிறப்பு அஞ்சலை அம்மாளுக்கு உண்டு.
இந்திய விடுதலை போராட்டத்திற்காக தனது குடும்ப சொத்தையும் விற்று செலவு செய்தார். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகிற இந்த காலத்தில் அஞ்சலை அம்மாள் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பாரதியாரால் பாராட்ட பெற்றவர் என்ற சிறப்பும் அஞ்சலை அம்மாளுக்கு உண்டு.
ஓராண்டு சிறை: சிப்பாய் கிளர்ச்சியின் போது பல சிப்பாய்களை படுகொலை செய்த ஆங்கிலேய படை தளபதி ஜேம்ஸ் நீல் நினைவாக மவுண்ட் சாலையில் ஒரு சிலையை ஆங்கிலேய அரசு நிறுவியது. 1860 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த சிலையை அகற்ற கோரி 1927 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தில் அஞ்சலை அம்மாள் பங்கேற்றார். இந்த போராட்டத்தில் சிலையை உடைத்ததற்காக ஓராண்டு சிறை தண்டனையும் பெற்றார்.
1931-ல் கடலூரில் நடந்த உப்புச் சத்தியாகிரக போராட்டத்தின் போது அஞ்சலை அம்மாள் கடுமையாகக் காயமடைந்தார். அதன்பின் ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். அப்போது அவர் ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தார். 1931 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற அனைத்திந்திய மகளிர் காங்கிரஸ் கூட்டத்திற்கு அஞ்சலை அம்மாள் தலைமை தாங்கினார்.
காந்தியை சந்திக்க விடாமல்: 1932-ல் காந்தியின் மது ஒழிப்புக் கொள்கைக்கு ஆதரவாகப் பொதுமக்களை திரட்டிக் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நடத்தினார், இதற்காக அவருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. 1933-ல் சட்டமறுப்பு மறியலில் பங்கேற்றார். அதே ஆண்டு அந்நியத் துணி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு மூன்று மாத சிறைத்தண்டனை பெற்றார்.
1934-ம் ஆண்டு காந்தியடிகள், கடலூருக்கு வந்தபோது அஞ்சலை அம்மாள் சந்திக்க முயன்றார். ஆனால் காந்தியை அஞ்சலை அம்மாள் சந்திக்க விடாமல் ஆங்கிலேய அரசு தடை விதித்தது. எனினும், இந்த தடையை உடைத்து அஞ்சலை அம்மாள் பர்தா அணிந்து வந்து காந்தியைச் சந்தித்தார். அஞ்சலை அம்மாளின் இந்த துணிவை பார்த்த காந்தி "தென்னிந்தியாவின் ஜான்சிராணி" என்று அஞ்சலை அம்மாளை அழைத்தார்.
அஞ்சலை வாய்க்கால்: 1947- ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தனக்குத் தியாகி ஓய்வூதியம் வேண்டாம் என மறுத்தார் அஞ்சலை அம்மாள். 1937, 1946, 1952 என 3 முறை சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகக் கடலூர் தொகுதியிலிருந்து அஞ்சலை அம்மாள் தேர்வு செய்யப்பட்டார். தான் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த போது, தீர்த்தம்பாளையம் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வீராணம் கால்வாயிலிருந்து கிளை வாய்க்கால் வெட்டி தண்ணீர் பஞ்சம் தீர்த்தார்.
அக்கிளை வாய்க்கால், "அஞ்சலை வாய்க்கால்" என அழைக்கப்படுகிறது. தனது கடைசி காலத்தில் முட்லூர் என்ற கிராமத்தில் விவசாய பணிகள் செய்து வந்த அஞ்சலை அம்மாள், 1961-ம் ஆண்டு பிப்ரவரி 20-ல் காலமானார். தமிழ்நாடு அரசு சார்பில் கடலூர் காந்தி பூங்காவில் சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications