Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. கடலூருக்கு ஹேப்பி.. தாம்பரத்தில் இருந்து ரயிலில் புறப்பட்ட ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமினை, நாளை அதாவது 15.07.2025 அன்று முதலமைச்சர், கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக இன்று சென்னையிலிருந்து, ரயில் மூலம் சிதம்பரம் சென்றார் முதல்வர் ஸ்டாலின்.. முதல்வரின் இந்த வருகை மிகுந்த எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் கடலூர் மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.

உங்களுடன் ஸ்டாலின் என்ற இந்தத் திட்டம் நாளை ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும்.

kalaignar magalir urimai thogai cuddalore ungaludan stalin

முகாம்கள் அரசுத்துறைகள்

தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள்/திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தின் கீழ் நகர்புறப் பகுதிகளில் 3,768 முகாம்களும் ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்களும் நடைபெறும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்.

சிறப்பு முகாம்கள்

இத்திட்டத்தின் கீழ் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. கடைக்கோடி மக்களுக்கும் அரசுத் துறை திட்டங்கள் அவர்கள் வசிக்குமிடத்திற்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.

அதுமட்டுமல்ல, இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். முகாம் பணிக்காக சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் முகாம் நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த விவரங்களை https://cmhelpline.tnega.org/ என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.

விடுபட்டவர்கள் - உரிமைத்தொகை

ஜூலை இரண்டாவது வாரம் தொடங்கி, அக்டோபர் மாதம் வரை இந்த முகாம்கள் நடக்கும். எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்ன சான்று, ஆவணங்கள் எல்லாம் இணைக்க வேண்டும்? தகுதி வரம்பு என்ன? இப்படி தேவையான எல்லா தகவல்களும், வழிகாட்டுதல்களும் வீட்டிற்கே தன்னார்வலர்கள் வந்து கொடுப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

இந்த முகாம்களில்தான், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று, முகாமிற்கே சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், பெண்கள் மத்தியிலும் கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..

இந்தப் பணி 3 மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் என்பதால், சுமார் ஒரு லட்சம் தன்னார்வலர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.. 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டு ஏற்கனவே கேட்டுக்கொண்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்று கிளம்புகிறார் ஸ்டாலின்

இந்நிலையில், நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று ரயில் மூலம் சிதம்பரம் புறப்பட்டார். தாம்பரத்தில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்படும் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சிதம்பரம் புறப்பட்டார். அங்கு செல்லும் அவருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

புதிய திட்டத்தை தொடங்கி வைத்த பின்பு 2 நாட்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நாளை மறுநாள் சென்னை திரும்புவதாக தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+