என் மகளின் பொருட்கள் எங்கே? விடை தெரியாத கேள்விகள்! சந்தேகங்களை அடுக்கும் கள்ளக்குறிச்சி மாணவி தாய்
கடலூர்: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில் அவரது தாயார் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பி இருக்கிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் சக்தி இண்டெர்நேஷனல் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இது ஈசிஆர் இண்டெர்நேஷனல் பள்ளி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

மாணவி மரணம்
பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த இந்த மாணவி கடந்த 13 ஆம் தேதி இரவு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு நியாயம் கேட்டு மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர். கடந்த 17 ஆம் தேதி வெடித்த வன்முறை தொடர்பாக பலரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இறுதிச்சடங்கு
மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஒரு வாரத்துக்கும் மேலாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதை வாங்க பெற்றோர் மறுத்து வந்தனர். இந்த நிலையில் பல்வேறு கட்ட இழுபறிக்கு பிறகு நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று சம்மதித்தனர். அதன் பின்னர் 23 ம் தேதி கடலூரில் மாணவியின் இறுதிச்சடங்கு நடைபெற்றது.

மாணவியின் தாய் கேள்வி
இந்த நிலையில் உயிரிழந்த மாணவியின் தாய் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பி இருக்கிறார். இறந்தபிறகுதான் மருத்துவமனை அழைத்து வரப்பட்டதாக மருத்துவர் சொல்கிறார். உயிரிழந்த என் மகள் உடலை என்னிடம் காட்டி உறுதிபடுத்துவதற்கு முன் சவக்கிடக்குக்கு கொண்டு சென்றது ஏன்? இதனாலேயே என் மகள் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டார் என்று சந்தேகம் வந்தது.

தூக்கியது யார்
தற்கொலை செய்த என் மகள் எங்கு விழுந்தார்? எப்படி விழுந்தார்? ஆம்புலன்ஸில் வைத்து கொண்டு சென்றார்களா? ஓட்டுநர் யார்? அல்லது பள்ளி வேனில் அழைத்து சென்றார்களா? அந்த வேன் எண் என்ன? தற்கொலை செய்ததை முதலில் பார்த்தது யார்? அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள் வந்தார்களா? அல்லது பள்ளியை சேர்ந்தவர்கள் மட்டும்தான் இருந்தார்களா? வேனில் ஏற்றும்போது உயிர் இருந்ததா? ரத்தம் கசிந்ததா? யார் மீது அவர் படுத்திருந்தார்? அவர் கையில் ரத்தம் ஒட்டி இருந்ததா?
Recommended Video

பொருட்களை கழற்றியது யார்?
என் மகள் அணிந்திருந்த பொருட்கள் அனைத்தையும் கழற்றிவிட்டார்கள். இந்த நிமிடம் வரை அந்த பொருட்களை கழற்றியது யார்? அது யாரிடம் உள்ளது? என்பது தெரியவில்லை. என் மகள் இறந்தபோது பள்ளி சீருடை கோர்டின் பட்டன்கள் கழற்றப்பட்டு இருந்தன. அது எனக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. என் மகள் உயிரிழந்த மறுநாள் துப்புரவு வேலை நடந்துவருவதாக காரணம் கூறி பள்ளிக்கு விடுமுறை விட்டுள்ளது சந்தேகத்தை அதிகரித்தது. என்ன நடந்தது என்று தெரிந்துகொள்வதற்காக பள்ளிக்கு சென்றபோது ஏராளமான ஆட்களும் காவல்துறையும் குவிக்கப்பட்டது ஏன்?" என்று கேள்விகளை அடுக்குகிறார் வேதனையுடன்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications