Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூக்கு, காதில் விஷத்தை ஊற்றி.. கண்ணகி - முருகேசன் ஆணவ கொலை.. 13 பேர் குற்றவாளிகள் என அதிரடி தீர்ப்பு

முருகேசன்- கண்ணகி தம்பதியின் ஆணவ கொலை செய்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

கடலூர்: முருகேசன்- கண்ணகி தம்பதியின் ஆணவ கொலை செய்த வழக்கில் பெண்ணின் தந்தை, அண்ணன் உள்பட 13 பேர் குற்றவாளிகள் என்று கடலூர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு நடந்த சம்பவம் இது:

Recommended Video

    முருகேசன்-கண்ணகி ஆணவ கொலை வழக்கு… ஒருவருக்கு தூக்கு தண்டனை… 12 பேருக்கு ஆயுள்!

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது குப்பநத்தம் புதுக்காலனி.. இங்கு வசித்து வந்தவர் முருகேசன்.. 25 வயதாகிறது.. தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்.. இவர் பி. இ பட்டதாரி ஆவார்.

    அதே பகுதியில் வசித்த கண்ணகி என்ற 22 வயது பெண்ணை காதலித்து வந்தார்.. கண்ணகி வேறு ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்.. இவர்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.

    விழுப்புரம்

    விழுப்புரம்

    அதனால், காதலர்கள் 2 பேரும் கடந்த 5.5.2003 அன்று கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துகொண்டனர்... இருந்தாலும் அவரவர் வீட்டில் தனித் தனியாக வசித்து வந்தனர்.. ஒருகட்டத்தில், விழுப்புரம் மாவட்டம், மூங்கில்துறைப்பட்டிலுள்ள உறவினர் வீட்டில் கண்ணகியை விட்டுவிட்டு, முருகேசன் ஸ்ரீமுஷ்ணம் அருகே வண்ணாங்குடிகாட்டிலுள்ள தன்னுடைய இன்னொரு சொந்தக்காரர் வீட்டில் தங்கியிருந்தார்.

     காணவில்லை

    காணவில்லை

    அப்போதுதான் திடீரென கண்ணகி காணாமல் போனது, அவர் குடும்பத்தினருக்கு தெரியவந்தது.. இதனால் பல இடங்களில் தேடியும் கண்ணகி கிடைக்கவில்லை.. இறுதியில்தான் முருகேசனுடனான காதல் விவகாரம் தெரியவந்தது.. உடனடியாக முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி மூலமாக ஜூலை 8-ம் தேதி முருகேசனையும், மூங்கில்துறைப்பட்டிலிருந்து கண்ணகியையும் குப்பநத்தம் கிராமத்துக்கு அழைத்து வந்தனர்...

    வழக்கு

    வழக்கு

    தம்பதி இருவரையும் பக்கத்தில் இருந்த சுடுகாட்டுக்கு அழைத்து சென்று, கை, கால்களை கட்டி, 2 பேருக்கும் மூக்கு, காது வழியாக விஷத்தை செலுத்தி, அவர்களை ஊர்மக்கள் முன்னிலையில் கொலை செய்தனர்.. இதை யாருமே தட்டிக் கேட்கவோ, தடுக்கவோ முன்வரவில்லை... கொஞ்ச நேரத்தில் துடிதுடித்து அந்த உயிர்கள் இறந்தன.. இதையடுத்து அந்த சடலங்களை தனித்தனியாகத்தான் எரித்தனர்.

    விசாரணை

    விசாரணை

    இதுகுறித்து விருத்தாசலம் போலீசாருக்கு தெரியவந்தது.. ஆனால், அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், நடந்த சம்பவத்தையே மூடிமறைக்கும் செயலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன..
    இதற்கு பிறகுதான் இந்த சம்பவம் வெளி உலகுக்கே தெரியவந்தது.. மீடியாவிலும் வெளியானது.. 18 நாள்கள் கழித்து விஏஓவிடம் புகாரை வாங்கி, காதல் திருமணத்தால் ஆணவக் கொலை செய்துவிட்டனர் என்று முருகேசன் தரப்பில் 4 பேர் மீதும், கண்ணகி தரப்பில் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர் விருதாச்சலம் போலீஸார்...

    சிபிஐ

    சிபிஐ

    ஆனால், சாதி ஆணவத்தில் நடத்தப்பட்ட இந்தக் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் பொ.ரத்தினம் களமிறங்கியதால் 2004-ம் ஆண்டு சிபிஐக்கு மாற்றப்பட்டது இந்த வழக்கு... வழக்கை விசாரித்த சிபிஐ அதே ஆண்டில் குற்றப் பத்திரிகையையும் தாக்கல் செய்தது.. இதுநாள்வரை கடலூர் கோர்ட்டில் தொடர்ந்து விசாரணையும் நடந்து வந்தது..

    தீர்ப்பு

    தீர்ப்பு

    அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதையடுத்து தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது..அதன்படி, முருகேசன்- கண்ணகியை ஆணவ கொலை செய்த வழக்கில் பெண்ணின் தந்தை, அண்ணன் உள்பட 13 பேர் குற்றவாளிகள் என்று கடலூர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.. மேலும் இதில் தொடர்புடைய மேலும் 2 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

     13 பேருக்கு ஆயுள்

    13 பேருக்கு ஆயுள்

    அதாவது, குற்றம்சாட்டப்பட்ட கண்ணகியின் தந்தை துரைசாமி, அவரது மகன் மருதுபாண்டி, ரங்கசாமி, அய்யாசுவாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, குணசேகரன், தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், ஓய்வு பெற்ற டிஎஸ்பி செல்லமுத்து ஆகிய 15 பேர் மீது வழக்கு பதியப்பட்டிருந்த நிலையில் 4ஆவது குற்றவாளியான அய்யாசுவாமி மற்றும் 9ஆவது குற்றவாளியான குணசேகரன் இவர்களை தவிர்த்து மற்ற 13 நபர்களும் குற்றவாளிகள் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+