கேட்டதற்கு பதில் சொல்லுயா! நான் மந்திரியா நீ மந்திரியா? ஒப்பந்ததாரரை வறுத்தெடுத்த அமைச்சர் கணேசன்!
கடலூர்: அரசு ஒப்பந்ததாரரை பொதுவெளியில் வைத்து அதிகாரிகள், கட்சிக்காரர்கள் முன்னிலையில் அமைச்சர் கணேசன் லெப்ட் அண்ட் ரைட் வாங்கியது ஒப்பந்ததாரர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு ஒப்பந்தப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் அந்த ஒப்பந்தப் பணி ஒன்றும் சும்மா கிடைத்துவிடாது. ஒப்பந்ததாரர் பதிவு, சொத்துவிவரம், டெபாசிட், இயந்திர தளவாடங்கள் என பலவற்றையும் சமர்பித்தால் தான் டெண்டரிலேயே கலந்துகொள்ள முடியும்.

அதுமட்டுமல்ல கீழிருந்து மேல் வரை நச்சரிப்புகளும் அதிகம் இருக்கும். அதனையும் சமாளித்து ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினால் லோக்கலில் 2 பேர் கட்டையை போடுவார்கள். வேலை சரியா நடக்கல, அப்படி நடக்குது இப்படி நடக்குதுன்னு பெட்டிஷன் போடுவார்கள். அதனையும் சமாளித்து சரி கட்டி எடுத்த வேலையை முடித்து அரசிடமிருந்து பில் வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.
இதனிடையே தான் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் ஒப்பந்ததாரரை எல்லோர் முன்னிலையிலும் அமைச்சர் கணேசன் ஒருமையில் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமைச்சர்கள் பொதுவிடங்களில் நாவட்டக்கத்துடன் பேச வேண்டும் என ஒரு முறை இரு முறை அல்ல பலமுறை முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியும் அதனை ஒரு சில அமைச்சர்கள் துளியும் கேட்டதாக தெரியவில்லை.
கட்டிடம் தொடர்பாக அமைச்சர் ஏதோ ஒரு கேள்வி கேட்க, அதற்கு ஒப்பந்ததாரர் ஒரு யோசனை சொல்ல, அமைச்சர் கணேசனுக்கு வந்ததே கோபம் பாருங்க, ''யோவ் நான் மந்திரியா நீ மந்திரியா? கேட்பதற்கு மட்டும் பதில் சொல்லுயா, நீ ஏன்யா பேசுறா'' என அந்த ஒப்பந்ததாரரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கினார் அமைச்சர்.
அமைச்சரிடம் எல்லோரது முன்னிலையிலும் திட்டு வாங்கிய ஒப்பந்ததாரரின் முகம் வாடிவிட்டது. அமைச்சர் சென்ற பிறகு உள்ளூர் கட்சியினர் அவரை சமாதானம் செய்து இயல்பு நிலைக்கு திருப்பினர்.












Click it and Unblock the Notifications