மைக் செட் பண்ணி வைக்க மாட்டியா? நான் எப்படி பேசுறது! வட்டாட்சியரை வெளுத்து வாங்கிய அமைச்சர் கணேசன்!
கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மீட்டிங்கிற்கு மைக் செட் பண்ணி வைக்காத வட்டாட்சியரை அமைச்சர் சி.வி.கணேசன் வறுத்தெடுத்திருக்கிறார்.
மைக் எங்கய்யா.. நான் எப்படி பேசுறது.. வேண்டுமென்றே என்னை அவமானப்படுத்த திட்டமிட்டியா என அந்த அதிகாரியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கியிருக்கிறார் அமைச்சர் கணேசன்.
மேற்கொண்டு பேசினால் வம்பு என்பதால், சாரி சார் என்ற ஒற்றை வார்த்தையோடு முடித்துக்கொண்டு அந்த வட்டாட்சியர் அமைதியாக நின்றுகொண்டார்.

கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்களுடனான சந்திப்பு கூட்டம் அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்றது. மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விருத்தாச்சலம் வட்டாரத்திற்குட்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அமைச்சர் டென்ஷன்
இந்தக் கூட்டத்தில் பேச மைக் இல்லாததை கண்டு டென்ஷனான அமைச்சர் கணேசன், கூட்டத்துக்கு ஏற்பாடுகளை கவனித்துக்கொண்ட வட்டாட்சியரை அழைத்து மைக் எங்கய்யா.. நான் எப்படி பேசுறது.. வேண்டுமென்றே என்னை அவமானப்படுத்த திட்டமிட்டியா என அனைவர் முன்னிலையிலும் வறுத்தெடுத்து விட்டார். அமைச்சர் கணேசன் இந்தளவுக்கு டென்ஷன் ஆவார் என எதிர்பார்க்காத அந்த வட்டாட்சியர் ஒரு நிமிடம் ஆடிப்போனார்.

மைக் செட்
எவ்வளவு முக்கியமான கூட்டம் இது, மைக் செட் பண்ணி வைக்க மாட்டியா என மீண்டும் தனது கோபத்தை அந்த வட்டாட்சியரிடம் வெளிப்படுத்தினார். இதையடுத்து அடுத்த சில நிமிடங்களில் அங்கு மைக் செட் செய்யப்பட்டு ஸ்பீக்கர் பாக்ஸ் வைக்கப்பட்டது. ஆனால் அமைச்சர் கணேசனுக்கு கோபம் தீர்ந்தபாடில்லை. இதைப் பார்த்த உயர் அதிகாரிகள் அமைச்சரை சமாதானம் செய்து ஒரு வழியாக வட்டாட்சியரை காப்பாற்றினர்.

கவனக் குறைவு
அமைச்சர் பங்கேற்கும் மீட்டிங்கிற்கு மைக் செட் செய்து வைக்காததற்கு காரணம் வட்டாட்சியரின் கவனக்குறைவா அல்லது சிறிய மீட்டிங் ஹால் என்பதால் மைக் தேவைப்படாது எனக் கருதினாரா எனத் தெரியவில்லை. மொத்தத்தில் விவகாரம் வில்லங்கமாகி வட்டாட்சியரை அமைச்சர் திட்டும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications