என் கேரக்டரே இது தான்! எதைப்பற்றியும் கவலைப்படும் ஆள் நானில்லை -அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கடலூர்: யாருக்காகவும் எதற்காகவும் தனது குணத்தை மாற்றிக்கொள்ள முடியாது என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தன்னைப் பற்றி போற்றூவோர் போற்றட்டும் என்றும் தூற்றுவோர் தூற்றட்டும் என்றும் அதற்கெல்லாம் கவலைப்படும் ஆள் தாமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
உழைப்பவனுக்கு எப்போதுமே இடைஞ்சல்கள் வரத்தான் செய்யும் என்றும் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது தனக்குத் தெரியும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

சர்ச்சைப் பேச்சு
அண்மையில் உரத்தட்டுப்பாடு தொடர்பாக கடலூரில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, நீ உரம் வாங்குனியாயா என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் காட்டமாக பதில் அளித்திருந்தார். அமைச்சரின் இந்த பதில் சர்ச்சையானது. இதனிடையே அது தொடர்பாக இன்று அரசு விழா ஒன்றில் பேசும் போது விளக்கம் அளித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தனக்கு நடிக்கத் தெரியாது என்றும் தனது கேரக்டரே இப்படித்தான் எனவும் கூறினார்.

பயம் இல்லை
மடியில் கணம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும் என்றும் தனக்கு அப்படியொரு எந்த பயமும் இல்லை என்றும் தன்னைப் பற்றி பேசுவோர் பேசட்டும், தூற்றுவோர் தூற்றட்டும், எழுதுவோர் எழுதட்டும் என ஓபன் மைக்கில் தெரிவித்தார். பத்திரிகையாளர்களிடம் இன்று நேற்றல்ல ஆரம்பக்காலம் முதலே இயல்பாக பேசுவதே தனது வழக்கம் என்றும் தனது கேரக்டரை மாற்றிக்கொள்ள முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கேரக்டர் இது தான்
யாருக்காகவும் தனது இயல்பாக குணத்தை மாற்றிக்கொண்டு நடிக்க வேண்டிய அவசியம் தனக்கில்லை என்று கூறிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக தரம் உயர்த்த உழைத்து வருவதாக தெரிவித்தார். அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை மனதில் தோன்றும் கருத்தை ஒளிவுமறைவின்றி யார் முன்னிலையிலும் பேசக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்கள்
இவர் மட்டுமல்ல அமைச்சரவையில் இவரைப் போல் பல அமைச்சர்கள் இப்படி இருக்கிறார்கள். கே.என்.நேரு, மூர்த்தி, துரைமுருகன், எ.வ.வேலு, என பலரும் தங்களின் இயல்பான கேரக்டரிலேயே மேடைப்பேச்சாக இருந்தாலும் சரி, செய்தியாளர்கள் சந்திப்பாக இருந்தாலும் சரி சற்று தடாலடி காட்டுவார்கள்.












Click it and Unblock the Notifications