கடலூரில் களமிறங்கும் திட்டத்தில் அமைச்சர் மகன்! களப்பணியில் உற்சாகம்! திமுக தலைமையின் முடிவு?
கடலூர்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தின் மகன் கதிரவன், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திட்டத்தில் இருக்கிறாராம்.
இது குறித்து சில மாதங்களுக்கு முன்பே நாம் கூறியிருந்த நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய கடலூர் சிட்டிங் திமுக எம்.பி. ரமேஷ் மீது கொலை வழக்கு உள்ளிட்ட இன்னும் பல சர்ச்சைகள் இருப்பதால் அவருக்கு மீண்டும் சீட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மகன் தான் அடுத்த வேட்பாளர் என்ற பேச்சு கடலூர் மாவட்ட திமுகவினர் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது. திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் ஆசியும் ஆதரவும் கதிரவனுக்கு உண்டு என்பதால், 2024-ல் இவர் தான் கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் என அமைச்சரின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.
அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஆகியோரது வாரிசுகள் தற்போது நாடளுமன்ற உறுப்பினர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் கதிரவனும் இடம்பெறுவாரா என்பது திமுக தலைமையின் கையில் தான் உள்ளது.
ஏனெனில் திமுக எம்.எல்.ஏ. ஐயப்பன் தரப்பு அமைச்சர் மகனுக்கு சீட் கொடுத்தால் கடும் ஆட்சேபனை தெரிவிக்கும் என்பதால் சர்வே நடத்திய பிறகு தான் யாருக்கு சீட் என்பதில் திமுக தலைமை இறுதி முடிவெடுக்கும் எனக் கூறப்படுகிறது.
-
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications