"உறுப்பு" வெந்துடுச்சு.. அலறிய பெண்.. பாத்ரூமுக்குள் ஓடிய மாமியார்.. இந்தம்மா "அந்த" கட்சி பிரமுகராம்
மருமகள் போனில் பேசிக் கொண்டிருப்பதாக நினைத்து மாமியார் செய்த காரியம் பதற வைத்து வருகிறது
கடலூர்: விருத்தாசலத்தில் மருமகள் மீது மாமியார் ஆசிட் ஊற்றிய சம்பவம் நேற்றைய தினம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்த காரணங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கின்றன.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம்- கடலூர் ரோடு செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கலிவரதன்... மனைவி பெயர் ஆண்டாள். இவரது மகன் முகேஷ்ராஜ்..
இவருக்கு திருமணமாகிவிட்டது.. மனைவி பெயர் கிருத்திகா.. 26 வயதாகிறது.. ரிஷிதா(5), ரிஷிகா(1) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முகேஷ்ராஜ் கோவை மாவட்டம் அவிநாசியில் தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வருகிறார்...

டாய்லெட் ஆசிட்
கிருத்திகாவின் நடத்தையில் மாமியார் ஆண்டாளுக்கு சந்தேகம் இருந்து வந்ததாக தெரிகிறது.. இதனால், மருமகளை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.. அப்படித்தான் நேற்று, அதிகாலையில் கிருத்திகா வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்.. அப்போது, பாத்ரூமில் இருந்த ஆசிட்டை எடுத்து வந்து, தூங்கிக் கொண்டிருந்த கிருத்திகா மீது மாமியார் ஆண்டாள் ஊற்றிவிட்டார். இதனால் கிருத்திகா வலியால் அலறி துடித்துள்ளார்.. அவரது முகம், கண், காது, உடம்பெல்லாம் படுகாயமடைந்துள்ளது.. அப்போதுகூட, ஆத்திரம் அடங்காத மாமியார், கொசு விரட்டி மருந்தையும் வலுக்கட்டாயமாக வாயில் ஊற்றிக் கொல்ல முயன்றுள்ளார்.

மாமியார் ஆண்டாள்
கிருத்திகாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அவரை மீட்டு விருத்தாசலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, மேல் சிகிச்சைக்காகக் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆசிட் ஊற்றப்பட்டதில் கிருத்திகாவின் வலது கண் பார்வை இழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.. மேலும், கிருத்திகாவுக்கு ஏற்பட்ட காயங்கள் மிக மோசமாக இருப்பதாகவும், அதனால், ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் கூறி, அங்கிருந்து மறுபடியும் அவரை புதுவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

ADMK மீட்டிங்
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, மாமியார் ஆண்டாளை கைது செய்து விசாரணை நடத்தினர்.. தற்போது அதுகுறித்த மேலும் சில விவரங்கள் தெரியவந்துள்ளது... மாமியார் ஆண்டாளுக்கு 55 வயதாகிறது.. இவர் அதிமுகவின் தீவிரமான தொண்டராம்.. விருத்தாசலம் அதிமுக நகர துணை செயலாளராகவும் தற்போது இருந்து வருகிறார்.. வழக்கமாக, கடலூர் மாவட்டத்தில் எங்கே அதிமுக கூட்டம் என்றாலும் தவறாமல் கலந்து கொள்வாராம்.. நேற்று முன்தினம் இரவு, விருதாச்சலத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடந்துள்ளது.. இதில் ஆண்டாள் கலந்து கொண்டுள்ளார்.. இரவு 10 மணிக்கு கூட்டம் முடிந்ததும் வீட்டுக்கு வந்துள்ளார்.. மருமகளின் நடத்தை மீது ஏற்கனவே ஆண்டாளுக்கு நிறைய சந்தேகம் இருந்து வந்துள்ளது..

போன்ல யாரு
சம்பவத்தன்று மீட்டிங் முடித்துவிட்டு வந்த நிலையில், மீண்டும் மருமகள் மீதான டவுட் அதிகமாகி உள்ளது.. அப்போது நள்ளிரவு 12 மணியை நெருங்கி கொண்டிருந்தது.. திடீரென ஆண்டாள் கிருத்திகா ரூமுக்குள் நுழைந்தாராம்.. அப்போது, கிருத்திகா கையில் செல்போனை வைத்து பார்த்து கொண்டிருந்தாராம்.. இதை பார்த்ததுமே ஆத்திரம் அடைந்த ஆண்டாள், யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாய்? என்று கேட்டுள்ளார்.. அதற்கு கிருத்திகா, யாருடனும் பேசவில்லை, சும்மா செல்போனை பார்த்து கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை ஏற்காத ஆண்டாள், அதற்கு பிறகுதான், டாய்லெட்டுக்குள் ஓடிச்சென்று, ஆசிட் எடுத்து வந்து கிருத்திகாவின் முகத்தில் ஊற்றியுள்ளார்..

பிறப்புறுப்பில் காயம்
அதற்கு பிறகு, இடுப்பு பகுதியில் நிறைய ஊற்றியுள்ளார்.. இதனால் பிறப்புறுப்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.. கொசு விரட்டி திரவத்தை கிருத்திகாவின் வாயில் ஊற்றி கொலை செய்ய முயன்றபோது, அந்த ஆசிட், கிருத்திகாவின் காது, கண்களில் கொட்டியிருக்கிறது. கிருத்திகாவின் முகம், கண்கள், காது, உடல், பிறப்புறுப்பு ஆகிய இடங்களில் காயங்கள் அதிகமாகவே உள்ளதாம்.. வலது கண் பார்வை இழந்துள்ளதால்தான், ஆபரேஷனுக்காக, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.. அதிமுக பிரமுகரான மாமியார் ஆண்டாளிடம் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications