பொண்ணுங்களை பார்த்துட்டா போதும்.. "டார்ச்சர்" பாஸ்கரன்.. தூக்கி போட்டு மிதித்த குப்பாயி.. அதிரடி!
மகனை கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்
கடலூர்: தெருவில் எந்த பெண் நடந்து சென்றாலும், ஓடிப்போய் அவரை கட்டிப்பிடித்து டார்ச்சர் செய்வாராம் பாஸ்கரன்.. கடைசியில் பாஸ்கரனின் கழுத்தில் மின்கம்பியை சுற்றி, கயிற்றால் கட்டி தூக்கி போட்டு மிதித்து தெருவில் இழுத்து சென்று, கடலூரையே கதிகலங்க வைத்து விட்டார் 65 வயசு பாட்டி..!
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வாணக்காரத்தெருவை சேர்ந்தவர் குப்பாயி.. 65 வயசாகிறது.. இவருக்கு 2 மகன்கள்.. மூத்த மகன் பாஸ்கரனுக்கு 36 வயசு, இன்னும் கல்யாணமாகவில்லை. 2வது மகன் பிரபாகரனுக்கு 31 வயசு, கல்யாணமாகிவிட்டது.
36 வயசாகியும் தனக்கு ஏன் கல்யாணம் செய்து வைக்கவில்லை என்று பாஸ்கரன் அவரது அம்மா குப்பாயியிடம் சண்டை போட்டு கொண்டே இருப்பாராம்.. ஆனால் மதுப்பழக்கம், கஞ்சா பழக்கம் இருப்பதால், எந்த பெண்ணையும் இவர் தலையில் கட்டி வாழ்க்கையை பாழாக்க குப்பாயி பாட்டி விரும்பவில்லை. எவ்வளவோ புத்தி சொல்லியும் பாஸ்கரன் திருந்தவில்லை.

ஆத்திரம்
இதனால் ஆத்திரத்தில், பாஸ்கரன் தெருவில் செல்லும் பெண்களை கட்டிப்பிடிக்க முயல்வதும், அவர்களின் பின்னாடியே சென்று டார்ச்சர் தருவதும், ஏன் என்று கேட்டால், அவர்களிடம் விடாமல்தகராறு செய்வதும் என தினந்தோறும் அட்டூழியம் செய்து வந்துள்ளார்.. இப்படி எல்லாம் செய்தால், வீட்டில் கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள் என்பதால், தெருவில் ஒரு பெண்களையும் விடாமல் டார்ச்சர் தந்துள்ளார் பாஸ்கரன்.

நடுத்தெரு
சம்பவத்தன்று இரவும் நடுத்தெருவில் நின்று கொண்டு அப்படித்தான் செய்து கொண்டிருந்தார் பாஸ்கரன்.. பொறுத்து பொறுத்து பார்த்த கருப்பாயி ஆவேசமாகிவிட்டார்.. இன்னொரு மகன் பிரபாகரனை துணைக்கு வைத்துக்கொண்டு ஒரு மின் கம்பியை பாஸ்கரனின் கழுத்தில் கட்டினார்.. இன்னொரு கயிறை எடுத்து பாஸ்கரனின் உடம்பில் கட்டி தூக்கி போட்டு அங்கேயே மிதித்தார்..

இறுதி சடங்கு
ஒரு கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கி, தெருவில் பாஸ்கரனை இழுத்து கொண்டு வீட்டுக்கு சென்றார். அத்தோடு சரி, கதவை அடைத்தாகிவிட்டது. ஒரு சத்தமும் வீட்டிற்குள் கேட்கவில்லை. மறுநாள் காலை, பாஸ்கரன் திடீரென இறந்துவிட்டதாக சொல்லி குடும்பத்தினர் அழுதுள்ளனர்.. இறுதி சடங்குக்கும் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.. ஆனால், சந்தேகப்பட்ட அக்கம்பக்கத்தினர் இரவு நடந்த விஷயத்தை ஸ்ரீமுஷ்ணம் போலீசில் சொல்லி, மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சொன்னார்கள்.

கைது
அதற்கு பிறகு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றியபோதுதான், பாஸ்கரனை அரிவாளால் பாட்டி வெட்டியது தெரியவந்தது. போஸ்ட் மார்ட்டம் செய்ய, விருத்தாசலம் ஆஸ்பத்திரிக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது.. இதுகுறித்து விஏஓ ரங்கசாமி தந்த புகாரின் பேரில் கருப்பாயியையும், பிரபாகரனையும் போலீஸ் கைது செய்தது..!
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications