பச்சை பசேல் நெற்பயிர்களை அழித்த என்எல்சி.. “அறுவடைக்கு தயாரான நிலத்தில் இறங்கவில்லை”: பரபர விளக்கம்!
கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே விவசாயிகள் நெல் பயிரிட்டிருந்த நிலங்களில் இன்று காலை முதல் அவற்றை அழித்து நிலம் சமன் செய்யும் பணியில் என்.எல்.சி ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக என்.எல்.சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
என்.எல்.சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே மேல்வளையமாதேவி கிராமத்தில் ஏற்கனவே கையகப்படுத்திய விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி இன்று காலையில் தொடங்கியது.

வயல்களில் இறங்கிய பொக்லைன்: வளையமாதேவி சுற்று வட்டார பகுதிகளில் விடிந்தும் விடியாமல் 35க்கும் மேற்பட்ட ஜேசிபி, பொக்லைன் இயந்திரங்கள் விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை அழித்து, நிலம் சமன் செய்யும் பணியில் ஈடுபட்டதைப் பார்த்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்து, நிலம் கையகப்படுத்தல் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
என்.எல்.சி. நிறுவனம் உரிய இழப்பீடு வழங்காமல் நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். நிலம் கையகப்படுத்தும் போது வழங்கப்பட்ட இழப்பீட்டில் ஏராளமான குளறுபடி நடந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
போலீசார் குவிப்பு, பதற்றம்: வளையமாதேவி சுற்றுவட்டாரப் பகுதியில் இன்னும் இரண்டு மாதத்திற்குள் நெற்பயிர்கள் அறுவடை செய்யத் தயாராக உள்ள நிலையில், பச்சை பசும் வயல் வெளிகளுக்குள் புகுந்து கால்வாய் வெட்டும் பணி தொடங்கியுள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் வளையமாதேவி பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் டிஐஜி ஜியாவுல் ஷேக், கடலூர் எஸ்பி ராஜாராமன் ஆகியோர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் யாரும் நிலம் சமன்படுத்தும் பகுதிக்குள் நுழையாதவாறு போலீசார் சுற்றிலும் குவிக்கப்பட்டு உள்ளனர்.
என்.எல்.சி விளக்கம்: இந்நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணி குறித்து என்.எல்.சி விளக்கம் அளித்துள்ளது. மேல் வளையமாதேவியில் அறுவடை நெற்பயிர்களை அழித்து கால்வாய் போடவில்லை, ஒரு மாத கால நெற்பயிர்களை மட்டுமே அழித்து கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றதாக என்.எல்.சி விளக்கம் அளித்துள்ளது.
இந்த நிலங்கள் 2006ஆம் ஆண்டே கையகப்படுத்தப்பட்டன. கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்ட பின்பே தற்போது பணிகள் நடைபெறுகின்றன. இழப்பீடு கொடுத்த பிறகும், மனிதாபிமான அடிப்படையில் நிலத்தில் விவசாயம் செய்ய அனுமதித்தோம்.
இப்போது விரிவாக்கப் பணிகள் தொடங்கி இருப்பதால் தற்போது நிலத்தை சமன் படுத்தும் பணிகள், கால்வாய் வெட்டும் பணிகள் நடந்து வருகின்றன என என்.எல்.சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும் வரை காத்திருக்காமல் வயல்களில் புகுந்துள்ளதற்கும், கூடுதல் இழப்பீடு கோரியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications