"இரண்டு நாட்களா தூக்கம் வரல.." தமிழக அரசை நான் எச்சரிக்கிறேன்! கைதுக்கு பின் ஆவேசமான அன்புமணி
கடலூர்: என்எல்சி நிர்வாகத்திற்கு எதிராக பாமகவினர் நடத்திய போராட்டத்தில் மிகப் பெரிய வன்முறை ஏற்பட்ட நிலையில், இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் வளையமாதேவி பகுதியில் விளைநிலங்களை என்எல்சி நிறுவனம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாமக சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.. என்எல்சி நிறுவனத்தின் பிரதான நுழைவாயில் முன்பு பாமகவினர் இந்தப் போராட்டத்தை நடத்தினர். உடன் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

போராட்டம்: என்.எல்.சி 2-வது சுரங்க விரிவாக்கப் பணிகளைக் கைவிட வலியுறுத்தி இந்த்ப போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டார். அப்போது அவரை அங்கிருந்து அழைத்துச் செல்ல விடாமல் பாமகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக வன்முறையும் ஏற்பட்டதால் அங்கே மிகவும் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டது. பெரும் போராட்டத்திற்குப் பின்னரே நிலைமை கட்டுக்குள் வந்தது.
இதற்கிடையே போலீஸ் வாகனத்தில் இருந்தபடி செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "விளைநிலங்களை இதற்குப் பின்னரும் தமிழ்நாடு அரசு என்எல்சி நிர்வாகத்திற்காக எடுத்துக் கொடுக்கக் கூடாது. கடந்த 66 ஆண்டுகளாக என்எல்சி நிர்வாகம் இங்கே இயங்கி வருகிறது. ஒட்டுமொத்த கடலூர் மாவட்டத்தையும் அவர்கள் அழித்துவிட்டார்கள்.

அன்புமணி ராமதாஸ்: எட்டு அடியில் இருந்த நிலத்தடி நீர் இன்று 800 அடிக்குச் சென்றுவிட்டது. உள்ளூர் மக்களுக்கு வேலை இல்லை. இந்த பகுதியில் வாழ்வாதாரமே இல்லாமல் போய்விட்டது. அனைத்தையும் என்எல்சி அழித்துவிட்டது. இப்போது தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறிவிட்டதாகவும் வெளிமாநிலத்திற்கு மின்சாரத்தை விற்பதாகவும் அமைச்சர் சொல்கிறார். இந்த நேரத்தில் நமக்கு என்எல்சி எதற்குத் தேவை.
காற்றாலை, சூரிய ஒளி, நீர் ஆகியவற்றில் இருந்து நம்மால் இப்போது புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை எடுக்க முடியும். மின்சாரம் தயாரிக்க எத்தனையோ மாற்று வழிகள் இருக்கிறது. ஆனால், உணவுக்கு ஒரு வழிதான் இருக்கிறது. அது நிலம் தான். அந்த நிலத்தைப் பாதுகாக்கத் தான் நாங்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறோம். கடந்த ஓராண்டாகக் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம் எனப் பல வகை போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
தூக்கம் வரல: கடந்த இரண்டு நாட்களாக போலீசாரை ஏவிவிட்டு, தமிழக அரசு விவசாய நிலங்களைக் கையகப்படுத்துகிறது. கதிர் விடும் நெற்பயிர்களை அழிக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு சும்மா இருக்க முடியவில்லை. எனக்கு இரண்டு நாட்களாகத் தூக்கம் வரவில்லை. இதன் காரணமாகவே உடனடியாக இங்கே போராட்டத்தில் இறங்கினோம். இதை அவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்.. இல்லையென்றால் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். மேற்கு வங்கத்தில் நடந்தது போன்ற சூழல் இங்கே வரக் கூடாது.
எச்சரிக்கிறேன்: தமிழக அரசுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். உடனடியாக இதை நிறுத்திக் கொள்ளுங்கள். இங்கே அமைதியான முறையிலேயே போராட்டம் நடத்துகிறோம். இந்த மாவட்டம் வளம் பெற வேண்டும். வளர்ச்சி பெற வேண்டும். இதற்குத் தமிழக அரசு என்எல்சி நிர்வாகத்திற்காக நிலத்தைக் கையகப்படுத்தாது என்ற அறிவிப்பு முதல்வரிடம் இருந்து வர வேண்டும். இந்த விவகாரத்தில் நாங்கள் மத்திய அரசையும் தான் தொடர்ந்து விமர்சித்து வருகிறோம்.
தமிழ்நாடு அரசு எதற்காக என்எல்சிக்கு உடந்தையாக இருக்கிறது. அனைத்து விஷயங்களிலும் மத்திய அரசை எதிர்க்கும் திமுக இந்த விவகாரத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்பது ஏன்.. உடந்தையாக இருப்பது ஏன்? என்எல்சி நிர்வாகத்தைத் தனியாருக்கு விற்பனை செய்யப்போவதாகச் சொல்கிறார்கள். தனியாருக்கு விற்கப் போகும் நிலத்திற்கு எதற்காக இத்தனை விவசாய நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுக்கிறீர்கள்" என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications