என்.எல்.சி நிலம் எடுப்பு ... பேருந்துகள் மீது கல்வீசி தாக்கிய மர்ம நபர்கள்.. காவல்துறை விசாரணை
கடலூர்: என்எல்சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கப் பணிக்காக விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் நேற்றிரவு 3 பேருந்துகள் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். கல்வீசியவர்கள் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
என்எல்சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கப் பணிக்காக மேல் வளையமாதேவி பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் வியாழக்கிழமையன்று போராட்டம் நடைபெற்றது. மாலை நேரத்தில் பண்ருட்டி, நெய்வேலி, கடலூர், பாலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கற்கள் வீசப்பட்டதில் 16 அரசு பேருந்துகள் சேதம் அடைந்தன.

காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட நிலையில், கிராமப் பகுதிகளுக்கான இரவு நேர பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. கிராமங்களிலேயே இரவு நேரத்தில் தங்கி, காலையில் இயக்கப்படும் பேருந்துகளையும், பணிமனைக்கு திரும்ப போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டிருந்தது.
இரவு நேரத்தில் பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டதால் கடலூர் பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் குழந்தைகளுடன் காத்திருந்தனர். பொதுமக்களின் சிரமத்தை அறிந்த காவல்துறையினர் மாற்று வாகனங்களை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர். இரவு நேரத்தில் அரசு பேருந்துகள் காவல்துறையினர் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.
கடலூர் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கம் போல் அனைத்து பகுதிகளுக்கு நேற்று காலை முதல் பேருந்து சேவை தொடங்கியது. முக்கிய சாலைகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கிராமப் புறங்களுக்கு செல்லும் பேருந்துகள் காவல்துறையினர் அனுமதி பெற்று இயக்கப்பட்டன. ஒரு சில பேருந்துகள் தாமதமாக இயக்கப்பட்டதாக பயணிகள் குற்றஞ்சாட்டினர். இதனிடையே நேற்றிரவும் 3 பேருந்துகள் மீது கல்வீசி தாக்கப்பட்டது. பேருந்து மீது கல்வீசிய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications