என்எல்சி விவகாரம்.. நிலம் கையகப்படுத்தும் திட்டம் இல்லை.. எம்ஆர்கே பன்னீர்செல்வம் உறுதி!
கடலூர்: என்எல்சி நிறுவனத்திற்காக புதிதாக நிலம் எதுவும் கையகப்படுத்தப்படாது என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதேபோல் என்எல்சி நிறுவனத்திற்காக ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்படும் என்றும் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
என்எல்சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கத்திற்காக விவசாயிகளிடம் இருந்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அரசியல் கட்சியினர் சொல்லி வந்தனர்.
இதற்காக அண்மையில் எம்எல்சி சார்பாக நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்டத்தில் விவசாயிகள் அனுமதிக்கப்படாததும் விவாதத்தை ஏற்படுத்தியது.

பாமக நடைபயணம்
இதனிடையே என்எல்சி நிறுவனம் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் பிரச்சனையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் கடலூரில் 2 நாள் நடைபயணத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டார். அதுமட்டுமல்லாமல் கூடிய விரைவில் என்எல்சி நிறுவனம் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசே கூறியுள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

வேல்முருகன் கோரிக்கை
அதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன், என்எல்சி நிறுவனம் சார்பாக பொதுமக்கள், விவசாயிகளிடம் எடுத்த, எடுக்கப்பட உள்ள நிலங்களுக்கு, ஒரு ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும், வீட்டுமனைக்கு வகைப்பாடு வித்தியாசமின்றி ஒரு செண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். மாற்றுமனை குறைந்தபட்சம் 20 செண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

விசிக வலியுறுத்தல்
இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தரப்பில், என்எல்சி நிறுவனத்தின் விரிவாக்க பணிக்கு இடம் கொடுப்பவர்களுக்கு ஏக்கருக்கு 1 கோடி ரூபாயும், வீட்டில் ஒருவருக்கு கட்டாய நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இதனால் கடலூர் மாவட்டத்தில் என்எல்சி சுரங்க விரிவாக்க விவகாரம் முக்கிய பேசுபொருளாக மாறியது.

நிலம் கையகப்படுத்தப்படாது
இந்த நிலையில் பாமக எம்எல்ஏ-க்கள் சதாசிவம் மற்றும் சிவக்குமார் ஆகியோர் என்எல்சி விவகாரம் தொடர்பாக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தை சந்தித்தனர். அப்போது பாமக எம்எல்ஏ-க்கள் தரப்பில், விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தரப்பில் கூறுகையில், என்எல்சி-க்காக புதிதாக நிலம் எதுவும் கையகப்படுத்தப்படாது என்றும், ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications