பண்ருட்டி அதிமுக எம்.எல்.ஏ.சத்யாவின் கணவருக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதிமுக எம்.எல்.ஏ.சத்யாவின் கணவரும், பண்ருட்டி முன்னாள் நகரமன்ற தலைவருமான பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்தடுத்து அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இன்று மட்டும் மூன்று திமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா ஏற்பட்டது.

Panruti AIADMK MLA Sathyas Husband get positive for Coronavirus

வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கணேசன், கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்எல்ஏ செங்குட்டுவனுக்கு 24 மணி நேரத்தில் கடந்த கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதிமுக எம்.எல்.ஏ.சத்யாவின் கணவரும், பண்ருட்டி முன்னாள் நகரமன்ற தலைவருமான பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Panruti AIADMK MLA Sathyas Husband get positive for Coronavirus

மேலும் எம்.எல்.ஏ. சத்யாபன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் கொரானா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு இன்னும் முடிவு தெரியவில்லை. முன்னதாக அதிமுகவில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் தமிழக அமைச்சர்கள் கேபி அன்பழகன், தங்கமணிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இரண்டு நாட்கள் முன் அதிமுக எம்எல்ஏ நிலோபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது .

அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ. பழனி, பரமக்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ .சதன் பிரபாகரன், உளுந்தூர்பேட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் (குணமாகிவிட்டார்) ஆகியோருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+