கடலூரில் பாகப்பிரிவினை.. பண்ருட்டியில் நிலத்தை சுற்றிய பெண்கள்.. சொத்துக்காக சேலையை அவிழ்த்த கொடுமை
கடலூர்: தந்தை வழிச் சொத்துக்கள், பூர்வீக சொத்துக்கள் மற்றும் தந்தையின் சுயமாக சம்பாதித்த சொத்துக்கள் போன்றவை அனைத்துமே பாகப்பிரிவினைக்கு உட்பட்டவையாகும்.. இந்து வாரிசுரிமைச் சட்டம், 2005ன் படி, மகன்களுக்குச் சமமாக மகள்களுக்கும் சொத்தில் பங்குண்டு. எனினும், பாகப்பிரிவினையால் ஏற்படும் குடும்ப வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்தவாறே உள்ளது.. தற்போது பண்ருட்டியில் நடந்துள்ள சம்பவம் கடலூரையே அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
நம்முடைய இந்தியாவை பொறுத்தவரை பாகப்பிரிவினை என்றாலே, சொத்து பிரச்சனைகளிலும், சலசலப்புகளிலும் போய் முடிந்துவிடுகிறது.. எவ்வளவுதான் திட்டமிட்டு செயல்பட்டாலும், பல நேரங்களில் சுமுகமாக பாகப்பிரிவினைகள் நடப்பதில்லை..

வாரிசுகளுக்குள் சிக்கல்களும், அதிருப்திகளும், ஏமாற்றங்களும், ஏற்படுவதால் விவகாரம் சிக்கலாகிவிடுகிறது. மேலும் கோர்ட் வரை விவகாரம் செல்ல வேண்டியதாகிவிடுகிறது. அதிலும் இதுபோன்ற வழக்குகளில் உடனடியாக தீர்வும் முடிவும் கிடைப்பதில்லை.. இதனால் தமிழகம் முழுவதும் பாகப்பிரிவினை தொடர்பான வழக்குகள் அதிகமாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில்தான், சொத்துக்கள் பாகப்பிரிவினை வழக்குகள் அனைத்தும் ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம், அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. சொத்துக்கள் பாகப்பிரிவினை வழக்குகள் அனைத்தும் ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவானது மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.
பண்ருட்டி சகோதரர்கள்
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் நடந்துள்ள பாகப்பிரிவினை தகராறு, மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. பண்ருட்டி அடுத்துள்ளது காடாம்புலியூர்.. இங்குள்ள நெல்லித்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராமர்.. இவருக்கு 63 வயதாகிறது.. இவருக்கு வைத்தியநாதன், சிங்காரவேல் என்ற 2 சகோதரர்கள்..
இந்த அண்ணன் தம்பி 3 பேருக்கும் பொதுவான நிலம் உள்ளது. இதை பாகப்பிரிவினை செய்து கொள்வது தொடர்பாக, 3 பேரின் குடும்பத்திலும் தகராறு இருந்து வந்தது.. இதில், இவர்கள் இருவருமே சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டனர்.
கடலூரில் பாகப்பிரிவினை
அப்போதும் நிலத்தகராறு வலுத்து வந்தது.. இதில், வைத்தியநாதனின் மனைவி சின்னையாள் (47) என்பவர் சம்பந்தப்பட்ட நிலத்தில், சொந்த வீடு கட்டும் பணியை கையில் எடுத்துள்ளார்.. இதற்கு இதற்கு சிங்காரவேலின் மனைவி செல்வராணி (55) என்பவர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்..
அப்போது சின்னையாளும், அவரது மகள்கள் ஜெயசித்ரா, ஜெயந்தி, அனுராதா ஆகியோர் ஒன்றுசேர்ந்து செல்வராணியை அடித்து தாக்கியிருக்கிறார்கள்.. மேலும் செல்வராணி உடுத்தியிருந்த புடவையை அவிழ்த்து, அந்த புடவையாலேயே அவரது கைகளை கழுத்து பகுதியுடன் சேர்த்து மரத்தில் கட்டிவைத்து, சரமாரி அடித்து உதைத்துள்ளனர்..
அப்போதும் ஆவேசம் அடங்காமல் உருட்டு கட்டைகளை கொண்டு வந்து தாக்கியிருக்கிறார்கள்.. ஒரு பெண்ணை, குடும்பமே சேர்ந்து தாக்குவதை அந்த கிராமத்திலுள்ளவர்கள் நின்று வேடிக்கை பார்த்துள்ளனர்.. அவர்களால் அப்பெண்களை தடுத்து நிறுத்த முடியவில்லை..
வீடியோ எடுத்தவர் மீதும் தாக்குதல்
கூட்டத்திலிருந்த ஒருவர், இந்த தாக்குதல் சம்பவத்தை தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.. உடனே அந்த நபரையும் 3 பெண்களும் சேர்ந்து தாக்க முயன்றுள்ளனர்.. ஒருகட்டத்தில் பொறுமையிழந்த கிராம மக்களில் சில பெண்கள், செல்வராணியை அங்கிருந்து மீட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை வீடியோவாக எடுத்தவர், சோஷியல் மீடியாவிலும் இதனை பதிவிட்டுவிட்டார்.. இந்த வீடியோவை பார்த்து இணையவாசிகள் கொந்தளித்துள்ளனர்..
இந்த வீடியோ போலீசாரின் கவனத்துக்கும் சென்றதையடுத்து, சின்னையாள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
செல்வராணி பரிதாபம்
ஆனால், அதற்குள் செல்வராணியை தாக்கிய பெண்கள் தலைமறைவாகிவிட்டனர்.. இதில், அனுராதா மட்டும் தற்போது கைதாகி உள்ளதால், மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.
இதனிடையே, சின்னையாள் வீட்டின் அருகே ராமர் நடந்து சென்றாராம்.. உடனே ஜெயந்தி, அனுராதா, அனுராதாவின் மகன் வைத்தீஸ்வரன் ஆகியோர் சேர்ந்து ராமரையும் வழிமறித்து தாக்கியிருக்கிறார்கள்.. இதனால் படுகாயமடைந்த ராமர் இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் தந்துள்ளார்.. இந்த புகாரின்பேரிலும் விசாரணை நடக்கிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications