துரோகிகளால் கூட விஜயகாந்த்தை கெட்டவர் என்று சொல்ல முடியாது.. பிரேமலதா அதிரடி!
சொந்த பணத்தில் கட்சியை நடத்தி வருபவர் விஜயகாந்த் என்று பிரேமலதா கூறியுள்ளார்.
Recommended Video

பண்ருட்டி: அதிமுக, திமுக ஊழல் செய்த பணத்தில்தான் கட்சி நடத்துவதுபோல, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சியை நடத்தவில்லை, அவர் தனது சொந்த பணத்தில் கட்சி நடத்துகிறார் என்றும் விஜயகாந்த்தின் துரோகிகள் கூட அவரை கெட்டவர் என்று சொல்ல முடியாது என்றும் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
பண்ருட்டியில் தேமுதிக கடலூர் மாவட்ட கழக செயலாளர் ப.சிவக்கொழுந்து இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். பிறகு பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:
[இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்ய நவ.27ம் தேதிவரை தடை.. ஹைகோர்ட் அதிரடி! ]

ஏன் நேரம் ஒதுக்கவில்லை?
தீபாவளி தினத்தன்று நீதிமன்றம் 2 மணி நேரம் நேரம் ஒதுக்கீடு செய்தது போன்று டாஸ்மார்க் கடைகள் நேரத்தையும் 2 மணி நேரமாக கொடுத்திருக்கலாம். தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை தீபாவளி தினத்தன்று 600 கோடியை எட்டியது மிக வேதனை அளிக்கக்கூடிய விஷயமாகும். தீபாவளிக்கு பட்டாசு படிப்பதற்கு நேரம் ஒதிக்கி நீதிமன்றம் டாஸ்மார்க் விற்பனைக்கு ஏன் நேரம் ஒதுக்கவில்லை?

பாலியல் புகார்கள்
தமிழகத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற ஆட்சி முழுக்க முழுக்க ஊழல் ஆட்சி. லஞ்ச ஒழிப்பு துறை ஐஜி முருகன் மீது பாலியல் புகார் உள்ளது.. இதனை விசாரிக்கும் இடத்தில் துணை முதல்வர் உள்ளார்.. ஆனால் அவர் மீது சிபிஐ புகார் உள்ளது.. இதை விசாரிக்கும் இடத்தில் ஆளுநர் உள்ளார்.. ஆனால் அவர் மீது நிர்மலாதேவியின் பாலியல் புகார் உள்ளது.

சொந்த பணம்தான்
எனவே தி.மு.க., அ.தி.மு.க. ஊழல் கட்சிகளாகும். அவர்கள் ஊழல் செய்த பணத்தில்தான் கட்சி நடத்துகின்றனர். விஜயகாந்த் தனது சொந்த பணத்தில் கட்சி நடத்துகிறார். விஜயகாந்த்தின் துரோகிகள் கூட அவரை கெட்டவர் என்று கூறமுடியாது.

அதிகாலையில் பட்டாசு
என்னைப்பொறுத்தவரை தற்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகின்றது. தீபாவளி தினத்தன்று அதிகாலையில் பட்டாசு வெடித்திருந்தால் கொசுக்கள் அனைத்தும் அழிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும்.

அமோக வெற்றி பெறும்
தமிழகத்தில் தேமுதிக மூன்றாவது கட்சியான குறிப்பிடுவது மிகத் தவறான விஷயம். தமிழகத்தை பொருத்தவரை தேமுதிக முதல் கட்சியாக திகழ்கிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி சட்டமன்ற தேர்தல் இருந்தாலும் சரி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்ற வேண்டும். அனைத்து தேர்தல்களிலும் தே.மு.தி.க. அமோக வெற்றிபெறும்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications