ராணுவமே வந்தாலும் பின்வாங்க மாட்டேன்! என்எல்சிக்கு எதிராக படை திரட்டும் அன்புமணி ராமதாஸ்!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: காவல்துறையை வைத்து மிரட்டினாலும் சரி ராணுவத்தையே அழைத்து வந்தாலும் சரி என்.எல்.சி.க்கு எதிரான போராட்டத்திலிருந்து தாம் பின்வாங்க மாட்டேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உறுதியளித்துள்ளார்.

என்.எல்.சி நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான கருத்தரங்கம் உழவர் பேரியக்கம் சார்பில் நெய்வேலியில் இன்று நடைபெற்றது.

அந்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூரியதாவது,

அப்போது எனக்குத் தெரியவில்லை

அப்போது எனக்குத் தெரியவில்லை

"15, 20 வருடங்களுக்கு முன்பு நிலம் கொடுத்தவர்களுக்கு விலை கொடுக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கையாகவும் இருந்தது. அப்பொழுது எங்களுக்கு புரியவில்லை, இப்பொழுது தான் எங்களுக்கு புரிய வந்திருக்கிறது. அன்றைக்கு எங்களுக்கு தெரிந்ததெல்லாம் நிலம் கொடுத்து விட்டார்கள், அவர்களுக்கு நல்ல வேலை கொடுக்க வேண்டும் என்பது தான்.''

இப்போது புரிகிறது

இப்போது புரிகிறது

''ஒன்றரை லட்சம் ரெண்டு லட்சம் என்றார்கள் நாங்கள் ஐந்து லட்சம், ஆறு லட்சம் கொடுக்க வைத்தோம். அன்று நான் அமைச்சராகவும் இருந்தேன், அன்று எனக்கு இவ்வளவு பெரிய பிரச்சனைகள் வரும் என்று தெரியவில்லை, இன்று எனக்கு தெரிந்திருக்கிறது, ஆனால் இன்றைக்கு, நாளை என்ன பிரச்சனை வரும் என்பது பலருக்கு புரியவில்லை, சில பேர் புரிந்த மாதிரி நடந்து கொள்கிறார்கள், சில பேர் புரிந்தும் புரியாத மாதிரி நடந்து கொண்டிருக்கிறார்கள்.''

அனைத்து சங்கங்கள்

அனைத்து சங்கங்கள்

''இங்கு அனைத்து சங்கங்களையும் அழைத்திருக்கிறோம். வர்த்தக சங்கம், தொழிலாளர் சங்கம், வணிகர் சங்கம், விவசாய சங்கம், அரசியல் கட்சிகள், ரோட்டரி சங்கம், அரிமா சங்கம் அனைவரையும் வர வைத்திருக்கிறோம். இவங்க யாருமே எங்களுக்கு பிரச்சனை இல்லை என்று ஒதுங்க முடியாது. அனைவருக்கும் என்.எல்.சி நிறுவனத்தால் பிரச்சனை இருக்கிறது.''

தின கூலி வேலை

தின கூலி வேலை

''சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் பேசுகிறார். ஒரு ஏக்கருக்கு 25 லட்சம் தருவதாக சொல்கிறார். 23 லட்சம் தருவதாக சொன்னதை, 25 லட்சம் தருவதாக சொல்கிறார். 1800 பேருக்கு வேலை தருவதாக அவர் சொல்லவில்லை, 1800 பேருக்கு வேலை இருக்கிறது, அதற்கு போட்டி போட வேண்டும், அதில் இடம் கொடுத்தவர்களுக்கு 20 மார்க் கூடுதலாக கொடுக்கிறேன் என்று அறிவித்திருக்கிறார். அப்படி என்ன வேலை என்றால்? தின கூலி வேலை தான் அந்த வேலை.''

பாட்டன் பூட்டன்

பாட்டன் பூட்டன்

''இது என் பாட்டன் பூட்டன் வாழ்ந்த மண், இது என்னுடைய அடையாளம், என்னுடைய கோவில், என்னுடைய சாமிகள் இங்குதான் இருக்கின்றது. எங்கள் சுடுகாடு இருக்கிறது, எங்கள் பள்ளிக்கூடம் இருக்கிறது, என் முன்னோர்கள் வாழ்ந்த மண். இதை விட்டுவிட்டு நான் எங்கே செல்ல வேண்டும்?
இன்று எனக்கு தெரிகிறது. 91 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எடுக்கப் போகிறார்கள் 91 ஆயிரம் ஏக்கர் என்றால் நெய்வேலியில் இருந்து கொள்ளிடம் வடக்கு கரை வரை உள்ள இடம் அழிய போகிறது. இதனை சும்மா சொல்லவில்லை ஆதாரத்துடன் சொல்கிறேன்.''

என்ன செய்வார்கள்?

என்ன செய்வார்கள்?

''25 லட்சம் நிலத்திற்கு பணம் கொடுக்கிறோம், 1800 வேலை கொடுக்குறோம் என்கிறார்கள். நிலம் வைத்திருப்பவர்களுக்கு இதனை கொடுப்பார்கள். ஐந்து சதவீதம் மக்கள் மட்டுமே நிலம் வைத்திருக்கிறார்கள். நிலம் இல்லாதவர்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள்? அவர்களுக்கு வாழ்வாதாரம் என்ன? அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் எங்கே தங்குவார்கள்? அவர் எங்கே படிப்பார்கள்? அவர்கள் வாழ்வாதாரம் என்ன? அதுக்கு பதில் சொல்ல வேண்டாமா? விவசாயத்தை அழித்து வளர்ச்சி வேண்டாம், அது எவ்வளவு பெரிய வளர்ச்சியாக இருந்தாலும் எனக்கு தேவையில்லை.''

பல முயற்சிகள்

பல முயற்சிகள்

''எட்டு வழி சாலைக்காக நாம் தான் போராட்டங்களை நடத்தினோம். நாம் எத்தனை வழக்குகளை போட்டு உள்ளோம். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைக்க பல போராட்டங்களை நடத்தினோம். அதனை அமைக்க முன்னாள் முதலமைச்சரை சந்தித்து பல முயற்சிகள் மேற்கொண்டு கொண்டு வந்தோம். ஆனாலும் முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை. இப்போது இவர்கள் சொல்லும் திட்டமும் அந்த பகுதியில் தான் வருகிறது.''

அரசியல் பேச வரவில்லை

அரசியல் பேச வரவில்லை

''சட்டமன்றத்தில் ஒன்று பேசிக்கொண்டும், வெளியில் ஒன்று செய்து கொண்டும் இருப்பது சரியில்லை. இங்கு நான் அரசியல் பேச வரவில்லை. 91 ஆயிரம் ஏக்கரை கையகப்படுத்த திட்டம் வைத்திருக்கிறார்கள். நெய்வேலி இல்லை என்றால் தமிழ்நாடு இருண்டு விடும் என்று சொல்கிறார்கள். யாரை ஏமாற்ற சொல்கிறார்கள்? தமிழ்நாட்டின் அன்றாடம் தேவை 18 ஆயிரம் மெகாவாட், என் எல் சி நிறுவனம் கொடுப்பது 800 லிருந்து ஆயிரம் மெகாவாட் மட்டுமே .இதற்கு போய் நாம் நிலத்தைக் கொடுத்து விவசாயத்தை அழித்து ஏன் இதெல்லாம் செய்ய வேண்டும்? எனக்கு புரியவில்லை.''

ராணுவம் வந்தாலும் சரி

ராணுவம் வந்தாலும் சரி

''காவல்துறையை வைத்து மிரட்டுகிறார்கள், ராணுவத்தை வேண்டுமானாலும் கூட்டி வாருங்கள், எங்களை எதுவும் பண்ண செய்ய முடியாது. நாங்கள் தற்போது அமைதியாக பேசிக் கொண்டிருக்கிறோம். ஒரு நாள் தான் நான் கோரிக்கை வைத்தேன். ஒரே நாள் கோரிக்கையில் 90% கடைகளை மூடி ஆதரவளித்தார்கள். அவர்களுக்கு தலை வணங்குகிறேன், பாராட்டுகிறேன். உங்களுடைய உணர்வு தெரிகிறது, பிரச்சனை உங்களுக்கு புரிகிறது. இது விவசாயிகள் பிரச்சனை அல்ல. நம் மண் சார்ந்த பிரச்சனை. நம் எல்லோருடைய பிரச்சினை என்பது உங்களுக்கு புரிகிறது. வாழ்வாதாரப் பிரச்சினை என்பது உங்களுக்கு தெரிகிறது.''

மக்கள் துணிச்சல்

மக்கள் துணிச்சல்

''மக்கள் துணிச்சலாக இருக்கிறார்கள். காவல்துறைக்கு எல்லாம் அவர்கள் பயப்பட மாட்டார்கள். இது வருங்கால பிரச்சனை, அதற்காக நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து களமிறங்க வேண்டும். 10 வருடத்தில் உணவு பற்றாக்குறைவரும். காலநிலை மாற்றத்தின் காரணமாக இன்னும் இந்த பிரச்சனை எல்லாம் 50 வருடங்களுக்கு பிறகு வரும் என நான் எதிர்பார்த்திருந்தேன் நினைத்திருந்தேன். ஆனால் தற்பொழுது ஆரம்பித்து விட்டது. காலநிலை அகதிகளாக போகப் போகிறோம் என் எல் சி க்கு நிலம் கொடுத்தவர்கள் எல்லாம் காலநிலை அகதிகள் தான்.''

10 முறைக்கு மேல் கைது

10 முறைக்கு மேல் கைது

''எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் 10 முறைக்கு மேல் கைதாகி இருக்கிறார்கள். ஒரு போன் செய்தால் போதும், கட்சியில் அவ்வளவு பேர் கைதாகி இருக்கிறார்கள். நீங்களும் எல்லோரும் வாருங்கள், ஸ்டெர்லைட் ஸ்டெர்லைட் என்று போராடி மூட வைத்தோம், அதனைவிட 100 மடங்கு மோசமான பிரச்சனை என் எல் சி யால் நடந்து கொண்டிருக்கிறது. உங்களுடைய ஆதரவு மட்டுமல்ல, பங்களிப்பும் வேண்டும். நீங்கள் அனைவரும் வரவேண்டும்" என கேட்டுக்கொள்கிறேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+