Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓரினச்சேர்க்கை டார்ச்சர்.. இணங்க மறுத்த மாணவன் கொலை.. மாறுவேடத்தில் சுற்றிய சைக்கோ.. அலறிய சென்னை

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் ஸ்ரீமுஷ்ணம் 12ம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த கொலைக்கு பின் என்ன நடந்தது? கொலையாளி சிக்கியது எப்படி என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மேல்புளியங்குடி கிராமத்தில் அந்த மாணவன் படித்து வந்தார். 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் 4 நாட்களுக்கு முன் பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பவில்லை. இதையடுத்து அவரின் பெற்றோர் ஊர் முழுக்க மாணவனை தேடி உள்ளனர். பல இடங்களில் தேடியும் மாணவன் கிடைக்கவில்லை.

Police arrest a murderer who killed a 12th student on Gay Sexual assault and murder in Chennai

இதையடுத்து ஊர் மக்கள் பலர் ஒன்று கூடி தேடியதில் மாணவன் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. ரத்த வெள்ளத்தில் பிணமாக மிதந்தபடி மாணவன் உடல் மீட்கப்பட்டது. அந்த கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். முதலில் பள்ளி மாணவர்களிடம் விசாரணை செய்தனர். அதன்பின் அந்த மாணவனுக்கு நெருக்கமான நண்பர்களிடம் விசாரணை செய்தனர். பள்ளிக்கு வெளியே இருக்கும் நண்பர்களிடம் விசாரணை செய்தனர்.

என்ன நடந்தது ? இதில் அந்த மாணவன் கொலை நடந்த அன்று ஆனந்த் என்று இளைஞரை சந்தித்ததாக கூறப்படுகிறது. அந்த இளைஞர் சமீப நாட்களாக மாணவன் உடன் நட்பாக பழகி வந்துள்ளார். பள்ளிக்கு செல்லும் போது அடிக்கடி சந்தித்து உள்ளார். இந்த நிலையில்தான் ஆனந்தனை போலீசார் தேடி உள்ளனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டதை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.

மாணவனை கொலை செய்துவிட்டு தப்பிய ஆனந்த் தப்பி ஓடியதை கண்டுபிடித்து உள்ளனர். போலீசார் விசாரணையில் அந்த மாணவனை கடைசியில் சந்தித்தது ஆனந்தன்தான் என்பது உறுதியாகி உள்ளது. இதை அடிப்படையாக வைத்தும், அவர்கள் சந்தித்த இடம், கொலை நடந்த இடம் இவற்றை வைத்தும்.. அவர்தான் கொலை செய்தது என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

இதனால் ஆனந்தனுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார்.. கடந்த 3 நாட்களாக அவரை தேடி வந்தனர். இந்த நிலையில்தான் 12ம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டு உள்ளார். சென்னை, தாம்பரத்தில் குற்றவாளி ஆனந்தை கைது செய்த தனிப்படை போலீசார் இவரை கைது செய்தனர்.

இந்த கொலைக்கு பின் என்ன நடந்தது? கொலையாளி சிக்கியது எப்படி என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. கொலை செய்துவிட்டு அந்த ஆனந்த் தப்பி ஓடி உள்ளார். அங்கே இவர் மொட்டை அடித்துள்ளார். ஆனால் போலீசார் இன்பார்மர்கள் மூலம் இது பற்றி தகவல் பெற்றுள்ளனர். மொட்டை அடித்து மாறுவேடத்தில் சுற்றித்திரிந்த ஆனந்தை சுற்றிவளைத்த போலீசார் அவரை கைது செய்தனர்.

அவரை மீண்டும் ஊருக்கு அழைத்து வந்து விசாரணை செய்ய உள்ளனர். ஓரினச்சேர்க்கை காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் தகவல் வெளியிட்டு உள்ளனர். அதன்படி அந்த மாணவனை பாலியல் தேவைக்காக ஆனந்தன் அழைத்து உள்ளார். ஆனால் ஆனந்தனுக்கு அந்த மாணவன் இணங்கவில்லை. இதனால் கோபம் அடைந்த ஆனந்தன் இந்த கொலையை செய்ததாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+