கடலூர் சிறையில் அதிரடி ரெய்டு.. நூற்றுக்கணக்கில் குவிந்த போலீஸால் பரபரப்பு
கடலூர்: கடலூர் மத்திய சிறையில் நூற்றுக்கணக்கில் குவிந்த போலீஸார் அதிரடி ரெய்டில் இறங்கினர். இதில் புகையிலைப் பொருட்கள், தீப்பெட்டிகள் சிக்கியதாக தகவல்கள் கூறுகின்றன.
கடலூர் மத்திய சிறைச்சாலையில் ஆயுள் கைதி, தண்டனை கைதி, விசாரணை கைதிகள் தண்டனை என பலரும் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு பெருமளவில் விதிமுறைகளுக்குப் புறம்பாக பல்வேறு பொருட்களின் நடமாட்டம் இருப்பதாக புகார்கள் குவிந்தவண்ணம் இருந்தன.

இந்த நிலையில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீஸார் மத்திய சிறைச்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதனால் சிறை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆய்வில் புகையிலை பொருட்கள், தீப்பெட்டிகள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனையில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டனர் போலீஸார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் வேறு ஏதேனும் பொருட்கள் கைப்பற்றப்பட்டதா என தகவல் வெளியாகவில்லை. வழக்கமான சோதனையாக இருந்தாலும் கூட இந்த ரெய்டின் பின்னணிக்கு வேறு காரணமும் கூறப்படுகிறது.
கடந்த மாதம் கடலூர் மத்திய சிறைச்சாலைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதேபோல இங்கு அடுத்தடுத்து கைதிகள் மரணமடைந்துள்ளனர். இந்தப் பின்னணியில்தான் திடீர் ரெய்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications