வேண்டுமென்றே அல்லது விபத்து? சிதம்பரம் நடராஜர் கோவில் தீபாராதனையில் காவலர் காயம்! பரபரப்பு
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சீதர்கள் ஏந்தி வந்த தீப்பந்தம் பட்டு போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ள நிலையில் தீட்சிதர்கள் வேண்டுமென்றே காவலர் மீது தீ வைத்தனரா? என்பது பற்றிய விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்திப்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவில் தான் ‛பூலோக கைலாயம்' என போற்றப்பட்டு வருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனம் விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் நடப்பது வழக்கம். இதில் அதிகமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள்.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன தரிசன விழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் இந்த விழா இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் தான் விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.
நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு மேளதாளம் முழங்கிட வேத மந்திரங்கள், தேவாரம், திருவாசகம் ஓதிட கோவிலில் இருந்து நடராஜர், சிவகாமசுந்திரி அம்பாள், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் தனித்தனி தேர்களில் வீற்றிருக்க பக்தர்கள் ‛சிவ.. சிவா' கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டம் முடிந்த பிறகு சாமிகள் இறக்கப்பட்டு கிழக்கு கோபுரம் பகுதியில் வரும்போது அங்குள்ள மக்கள் மற்றும் வியாபாரிகள் நடராஜர் மற்றும் சிவகாம சுந்தரிக்கு தீபாராதானை காட்டுவது வழக்கம்.

அந்த வகையில் அங்கு கடை வைத்திருக்கும் பாலகுரு என்பவர் தீபாராதானை காட்டும்போது அவருக்கும், கோவில் தீட்சிதர்களுக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்சனை உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அசம்பாவிதங்களை தடுக்க பாலகுருவின் கடைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதையடுத்து பாலகுரு தீபாராதனை காண்பிக்க தயாராக இருந்தார். அப்போது நடராஜர் முன்பு காட்டும் தீப்பந்தத்தை தீட்சிதர்கள் பொதுமக்கள் மற்றும் போலீசாரை நோக்கி காண்பித்து பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர் பிரகாஷ் தீக்காயமடைந்தார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே தான் தீபாராதனையின்போது நடராஜர் முன்பு காட்டும் தீப்பந்தத்தை தீட்சிதர்கள் பொதுமக்கள், போலீசாரை நோக்கி காட்டியது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
தீட்சிதர்கள் வேண்டுமென்றே இப்படி செய்தனரா? இல்லாவிட்டால் கூட்ட நெரிசலில் இப்படி நடந்ததா? என்பது பற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதுபற்றி சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி கூறுகையில், ‛‛நடந்த சம்பவம் உண்மை. இதுதொடர்பாக விசாரணையை தொடங்கி உள்ளோம்'' என்றும் கூறியுள்ளார்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications