கடலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஜயகாந்த் எங்கே.. உன்ன யாரு வரசொன்னது, என் கேப்டன் எங்கே.. பிரேமலதாவிடம் கதறிய ரசிகர்.. பரபர கடலூர்

கடலூரில் பிரேமலதா சென்றபோது, விஜயகாந்த் ரசிகரால் திடீரென பரபரப்பு ஏற்பட்டது

Google Oneindia Tamil News

கடலூர்: தேமுதிக உட்கட்சி தேர்தலுக்கு பிறகு பிரேமலதா விஜயகாந்த்தை தேமுதிக தலைவராக எதிர்பார்க்கலாம்? - கடலூரில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.

கடலூர் அடுத்த அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றில் மூழ்கி சிறுமிகள், இளம்பெண்கள் என 7 பேர் கடந்த 5ம் தேதி உயிரிழந்தனர்..

கிளாஸ் ரூமிலேயே.. அதுவும் ஜன்னலுக்கு பக்கத்தில்.. காலை டேபிளில் போட்டு.. பபிதா டீச்சர் செய்த காரியம்கிளாஸ் ரூமிலேயே.. அதுவும் ஜன்னலுக்கு பக்கத்தில்.. காலை டேபிளில் போட்டு.. பபிதா டீச்சர் செய்த காரியம்

உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதற்காக, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஒவ்வொருவராக அருங்குணம் குச்சிபாளையம் கிராமத்துக்கு சென்று வந்து கொண்டிருக்கிறார்கள்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

நேற்றைய தினம் சசிகலா வந்துபோன நிலையில், இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்திருந்தார்.. உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண தொகையையும் வழங்கினார். பின்னர் செய்தியார்களிடம் பிரேமலதா சொன்னதாவது: "கழிவறை வசதியின்மை காரணமாக 7 பேரின் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற உயிரிழப்பு வேறெங்கும் நடக்காதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..

அங்கன்வாடி

அங்கன்வாடி

உயிர் இழந்தவர்களுக்கு வழங்கப்பட்ட 5 லட்ச ரூபாய் நிவாரண தொகையை உயர்த்தி 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.. உயிரிழந்த 7 பேரின் நினைவாக பொதுவாக ஒரு பகுதியில் நினைவு தூண் அமைத்திட வேண்டும்.. தமிழக அரசு எல்கேஜி, யூகேஜி அங்கன்வாடி மையத்திற்கு மாற்றியுள்ளது.. தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையம் உள்ளது.. அதனால், அங்கன்வாடி மையம் எவ்வாறு பலனளிக்கிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

விஜயகாந்த்

விஜயகாந்த்

ஆட்சி மாறுகிறதே தவிர காட்சி மாறவில்லை.. மக்களுக்கு ஒதுக்கிய நிதி, லஞ்சம், ஊழல், மற்றும் அரசியல்வாதிகளுக்கு செல்கிறதே தவிர முறையாக பொது மக்களுக்கு சென்று சேரவில்லை.. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேமுதிக தலைவர் பதவியை பிரேமலதா விஜயகாந்த் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.. உட்கட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.. அதன் பிறகு விஜயகாந்த் என்ன முடிவு செய்கிறாரோ அது தான் இறுதி முடிவு" என்றார் பிரேமலதா.

 கதறி அழுதார்

கதறி அழுதார்

முன்னதாக, உயிரிழந்த சுமிதா வீட்டிற்கு பிரேமலதா சென்றபோது, அவருடன் கட்சி நிர்வாகிகளும் உடன் சென்றனர்.. சிறுமியின் தாயிடம், நடந்த சம்பவம் குறித்து பிரேமலதா நம்பிக்கையுடன் விசாரித்து ஆறுதல் சொன்னார்.. அங்கு வந்த பிரேமலதாவை பார்த்ததுமே, சிறுமியின் தந்தை தலையில் அடித்து கொண்டு அழுதார்.. "நீ இங்கே ஏன் வந்தே.. என் அண்ணன் விஜயகாந்த் எங்கே? என் கேப்டன் எங்கே?" என்று கதறி கதறி அழுதார்.. அதற்கு பிரேமலதா, "அவர் சென்னையில் இருக்காரு" என்று சொன்னார்.

 இதயம் நொறுங்கியது

இதயம் நொறுங்கியது

"என் கேப்டன்தான் எனக்கு எல்லாமே.. கேப்டனின் தீவிர ரசிகன் நான்.. ஆறுதல் சொல்ல என் தலைவரை வர சொல்லுங்கள்" என்று இதயம் வெடித்து கதறினார்.. அவரை பிரேமலதா உட்பட அங்கிருந்தோர் யாராலும் தேற்ற முடியவில்லை.. பிறகு, என் அண்ணி வந்துட்டாங்க.. என் அண்ணன், அண்ணி எங்களுக்கு இருக்காங்க என்று மறுபடியும் சொல்லி அழுதார்.. இதனால் அந்த வீட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது... இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

English summary
premalatha vijayakanth arrives cuddalore to offer condolence to the girls family and says about vijayakanth கடலூரில் பிரேமலதா சென்றபோது, விஜயகாந்த் ரசிகரால் திடீரென பரபரப்பு ஏற்பட்டது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X