Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசுப் பள்ளிக்குள் கத்தியுடன் வந்த 'பேப்பர்' ரவுடிகள்.. கொத்தோடு தூக்கிச் சென்று.. "கவனித்த" போலீஸ்

தெனாவட்டாக பெரிய ரவுடிகளை போல சீன் போட்ட அவர்கள், ஆசிரியர் ஒரு அதட்டல் போட்டதும் பெட்டிப் பாம்பாக கைக்கட்டி நின்றனர்.

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூரில் அரசுப் பள்ளி ஒன்றுக்குள் பட்டா கத்திகளுடன் சென்ற டம்மி ரவுடிகளை மக்கள் ரவுண்டு கட்டி போலீஸில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்குள் கத்தியுடன் எதற்காக அவர்கள் சென்றனர்; வேறு பிரச்சினைக்கு மாணவர்கள் அவரை வரவழைத்தார்களா என்ற ரீதியில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் அரசுப் பள்ளிக்குள் கத்தியுடன் நுழையும் அளவுக்கு ரவுடிகளுக்கு துணிச்சல் வந்துவிட்டதாகவும், இதுபோன்ற நபர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தடம் மாறும் பள்ளி மாணவர்கள்

தடம் மாறும் பள்ளி மாணவர்கள்

சமீபகாலமாக, பள்ளி - கல்லூரி மாணவர்களின் போக்கு மோசமாக உள்ளது. வீட்டிலும், பள்ளியிலும் கண்டிப்பு இல்லாததால் சில மாணவர்கள் கஞ்சா, மது உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். ஒருகாலத்தில், கல்லூரி மாணவர்கள்தான் பொது இடங்களில் சண்டையிடுவதை பார்க்க முடியும். ஆனால், தற்போது பள்ளி மாணவர்களும் வெளியிடங்களில் இருதரப்பாக பிரிந்து கத்தி, அரிவாளுடன் சண்டையிடும் அளவுக்கு அவர்களிடம் வன்முறை கலாச்சாரம் அதிகரித்துள்ளது. அதேபோல், தீய சகவாசமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை மெய்ப்பிக்கும் விதமான சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.

கத்தியுடன் நுழைந்த ரவுடிகள்

கத்தியுடன் நுழைந்த ரவுடிகள்

கடலூர் மாவட்டம் அருகே உள்ள சிறு கிராமம் பகுதியில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்குள் நேற்று காலை 20 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள் நுழைந்துள்ளனர். அவர்களின் தோற்றத்தையும், தள்ளாடியபடி அவர்கள் நடப்பதையும் பார்த்த அப்பகுதி மக்கள், அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களை சோதித்ததில் இரண்டு பெரிய பட்டா கத்திகளை அவர்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ரவுண்டு கட்டிய பொதுமக்கள்

ரவுண்டு கட்டிய பொதுமக்கள்


இதையடுத்து, அவர்களை நாலு தட்டு தட்டிய மக்கள், பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் ஒப்படைத்தனர். அதுவரை தெனாவட்டாக பெரிய ரவுடிகளை போல சீன் போட்ட அவர்கள், ஆசிரியர் ஒரு அதட்டல் போட்டதும் பெட்டிப் பாம்பாக கைக்கட்டி நின்றனர். பின்னர் அவர்களிடம் விசாரணையில், அப்பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனின் பெயரை சொல்லி, அவனை பார்ப்பதற்காக வந்தோம் எனக் கூறினர். எதற்கு கத்தியுடன் வந்தீர்கள் எனக் கேட்டதற்கு, வரும் வழியில் கீழே கிடந்ததாகவும், உரியவர்களிடம் ஒப்படைப்பதற்காக வைத்திருந்தோம் என பயத்தில் மழுப்பினர்.

போலீஸிடம் ஒப்படைப்பு

போலீஸிடம் ஒப்படைப்பு

இதனைத் தொடர்ந்து, காவல் நிலையத்தை தொடர்புகொண்ட ஆசிரியர் நடந்த விஷயங்களை கூறினார். இதன்பேரில் அங்கு வந்த போலீஸார், அந்த இரண்டு பேரையும் 'லைட்'டாக கவனித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மேலும், அவர்கள் கூறிய மாணவனிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். எதற்காக கத்திகளுடன் அவர்கள் வந்தார்கள்.. மாணவர்களுக்கு இடையேயான சண்டையில் வெளியில் இருந்து ரவுடிகள் வரவழைக்கப்பட்டார்களா என்ற ரீதியில் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+