ஒரே குடும்பத்தில் இரண்டாவது அதிகாரி.. பண்ருட்டி முந்திரி விவசாயி மகள்கள் யுபிஎஸ்சி தேர்வில் சாதனை
கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஒரே குடும்பத்தில் இரண்டாவதாக ஒருவர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
பண்ருட்டி அருகே முந்திரி விவசாயி மகள் சுஷ்மிதா, யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளார். இந்திய அளவில் 528வது இடத்தை பிடித்துள்ள அவர், விரைவில்அதிகாரியாகி சேவை செய்ய உள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு இவரது சகோதரி ஐஸ்வர்யாவும் யுபிஎஸ்சி தேர்வில தேர்ச்சி பெற்று தற்போது பொன்னேரி துணை ஆட்சியராக உள்ளார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ்,ஐஎப்எஸ்(தூதரக அதிகாரி), ஐஎப்ஓஎஸ் (வனத்துறை அதிகாரி), இந்திய போஸ்டர் அதிகாரி,ரயில்வே அதிகாரிகள் உள்பட பல்வேறு மத்திய அரசு பணிகளில் சேருவதற்கு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2022 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று (செவ்வாய்கிழமை) வெளியாகி உள்ளது. இந்த தேர்வை எழுதியவர்களில் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் இதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 39 பேர் தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை தேசிய அளவிலான தரவரிசையில் சென்னை மாணவி ஜீஜீ, சென்னை பெரும்பூரை சேர்ந்த அவர் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்று உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ண சாமி 107 வது இடத்தை பிடித்து உள்ளார். அதேபோல் சரவணன் என்பவர் 147 வது இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறார்.
அருண் என்பவர் 426 இடத்தையும், சென்னையை சேர்ந்த மதிவதனி இராவணன் என்ற பெண் 447 வது இடத்தை பிடித்து தேர்வில் தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். கார்த்திக் என்பவர் 488 வது இடத்தையும், பண்ருட்டி அருகே முந்திரி விவசாயி மகள் சுஷ்மிதா இந்திய அளவில் 528வது இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
சுஷ்மிதாவின் சகோதரி ஐஸ்வர்யாவும் கடந்த 2020ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில தேர்ச்சி பெற்று தற்போது பொன்னேரி துணை ஆட்சியராக உள்ளார். ஒரே குடும்பத்தில் அக்காள் தங்கை என இருவரும் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது பண்ருட்டியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications