கடலூரில் சிதறிய மருத்துவ சான்றிதழ்.. போலி ஆவணம்.. சித்த மருத்துவ மாநில தலைவர் சுனா பானா கைது
கடலூர்: இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் சுப்பையா பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.. இது தொடர்பான விசாரணையை போலீசார் உடனடியாக மேற்கொண்டு வருகிறார்கள்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த ஜுன் மாதம் சாலையோரம் போலி சான்றிதழ்கள் சிதறி கிடந்தன.. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சுப்பையா பாண்டியன் கருதப்பட்டார்.. இதையடுத்து, போலி மருத்துவ சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் சுப்பையா பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி குறிஞ்சி நகரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்த சிபிசிஐடி போலீசார், அவரது வீட்டிலும் அதிரடியாக சோதனையை நடத்தினார்கள். அப்போது அவரது மனைவி பெயரிலும், போலி மருத்துவ சான்றிதழ்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, போலி மருத்துவ சான்றிதழ் வழங்க, 5 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை பணம் பெற்றதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
போலி சான்று கும்பல்களுக்கு ஏஜென்ட் போல் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலி மருத்துவ சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் சுப்பையா பாண்டியன் கைதாகியிருக்கும் நிலையில், இந்த வழக்கில் முக்கிய நபரான கவுதமன் என்பவரை கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். அதேபோல, முக்கிய குற்றவாளியான ஒஸ்தின் ராஜா என்பவருக்கும் போலீஸ் வலை விரித்துள்ளது.
தற்போது, சுப்பையா பாண்டியனை கடலூருக்கு அழைத்துவந்து சிபிசிஐடி போலீசார் விசாரணையை துவங்க உள்ளனர்.. சிதம்பரம் அருகே போலி சான்றிதழ்கள் கண்டெடுத்த வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாநில தலைவர் சுப்பையா பாண்டியனும் கைதாகி இருப்பது பரபரப்பை தந்து வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications