பொண்டாட்டியை சேர்த்து வைக்கலைன்னா.. தற்கொலை செய்துப்பேன்.. கழுத்தில் வெடிகுண்டுடன் மருமகன் மிரட்டல்

தற்கொலை செய்வதாக மாமியாரை மருமகன் மிரட்டி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தற்கொலை செய்வதாக கழுத்தில் வெடிகுண்டுடன் மாமியாரை மிரட்டிய மருமகன்-வீடியோ

    கடலூர்: "மாமியாரே.. என் பொண்டாட்டியை என்கிட்ட சேர்த்து வைக்கலைன்னா.. இப்படியே தற்கொலை செய்துப்பேன்" என்று கழுத்தில் வெடிகுண்டு, உடம்பில் மண்ணெண்ணையுடன் மருமகன் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நெய்வேலி டவுன் ஷிப் வட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மணிகண்டன் என்பவருக்குதான் குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. மனைவியை தன்னிடம் இருந்து பிரித்தது மாமியார் என்பதால் அவர் மீது கடுமையான கடுப்பில் இருந்திருக்கிறார் மணிகண்டன்.

    அதனால் மாமியார் வீட்டின் முன்பு மணிகண்டன் பெட்ரோல் கேனுடன் சென்றார். மனைவியை தன்னிடம் சேர்த்து வைக்கவில்லை என்றால், கொளுத்தி கொண்டு செத்து விடுவதாக சொன்னார். இதை பார்த்து பதறி கொண்டு மாமியார் தெருவில் வந்து கூச்சலிட்டார்

     கூச்சல்

    கூச்சல்

    அப்போது அந்த வழியாக நெய்வேலி நகர முதன்மை காவலர் பாலச்சந்திரன் வந்து கொண்டிருந்தார். நடுத்தெருவில் பெண் கூச்சலிடுவதை கண்டு என்ன ஏதென்று விசாரித்து, வீட்டிற்குள் நுழைந்து பார்த்தார். அப்போது மணிகண்டன் சக்தி வாய்ந்த வெடிகுண்டை, தன்னுடைய கழுத்தில் சுற்றி கொண்டு, உடல் முழுவதும் பெட்ரோலையும் ஊற்றிக் கொண்டு நின்றார். கையில் தீப்பெட்டி இருந்தது. தன்னை பற்ற வைத்துகொண்டு தற்கொலை செய்யப்போவதாக தெரிவித்தார்.

     பேச்சு தந்தார்

    பேச்சு தந்தார்

    ஆனால் பாலச்சந்திரன் இதை பார்த்து பதறிவிடவில்லை. நயமாகவும், தந்திரமாகவும் மணிகண்டனிடம் பேச்சு கொடுத்தார். அப்படியே பேசியபடியே நேரத்தை இழுத்து கொண்டே போனார். ஆனாலும் மணிக்கண்டன் தற்கொலை எண்ணத்தை விடவே இல்லை. "என் பொண்டாட்டியை என்கிட்ட சேர்த்து வைங்க" என்று திரும்ப திரும்ப சொல்லி கொண்டே இருந்தார்.

    விபரீதம்

    விபரீதம்

    ஒரு கட்டத்தில் நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்த பாலச்சந்திரன் நெய்வேலி டவுன் போலீசுக்கு போன் செய்யவும், தலைமை காவலர் சங்கர், போலீஸ்காரர் ராஜியும் வந்தனர். அவர்களும் மணிகண்டனிடம் பேச்சு தந்தனர். கடைசியில் வேறு வழியே இல்லை என்று உணர்ந்த பாலசந்திரன், மணிகண்டனின் 2 வயது குழந்தையை தூக்கி கொண்டு வந்தார்.

     கதறினார்

    கதறினார்

    "இரண்டு போலீஸ்கார்கள், நான், உன் குழந்தை மொத்தமா சேர்ந்து தற்கொலை செய்துகொள்வோம்" என்று பாலச்சந்திரன் மணிகண்டனிடம் கண்டிப்புடன் சொன்னார். இதை கொஞ்சமும் மணிகண்டன் எதிர்பார்க்கவே இல்லை. அழுதுகொண்டே ஓடிவந்து குழந்தையை தூக்கி வாரி அணைத்து கொண்டார். உடனே போலீசார் அவரது உடலில் இருந்து வெடிகுண்டுகளை அகற்றி, உடம்பில் தண்ணீரை ஊற்றினர்.

     நன்றி

    நன்றி

    எல்லாம் ஒரு வழியாக முடிந்தது என்று நினைத்து பெருமூச்சு விட்டால், அங்கே தான் ஒரு ட்விட்ஸ்ட் வைத்தார் மணிகண்டன். தான் ஏற்கனவே விஷத்தை சாப்பிட்டு விட்டேன் என்றார். உடனே போலீஸ்காரர்கள் ஷாக் ஆகி மணிகண்டனை என்எல்சி ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடினார்கள். ஆனாலும், தங்கள் உயிரையே பணயம் வைத்து ஒரு உசுரை காப்பாத்திய இந்த போலீஸ்காரர்களுக்கு நெய்வேலி மக்கள் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+