இந்த வேகம் என்னை கொல்லக்கூடும், யாரும் அழவேண்டாம்.. பல்சரில் எழுதிய ஆகாஷ்.. பனை மரத்தில் மோதி பலி
பனை மரத்தில் பைக் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்
Recommended Video
கடலூர்: ஹெல்மட் போடல.. வேகமாக பல்சரை ஓட்டி வந்து பனை மரத்தில் மோதி உயிரைவிட்டார் இளைஞர் ஆகாஷ்.. ஆனால், அந்த பல்சரில் அவர் எழுதி வைத்த வாசகம்தான் அப்பகுதி மக்களை நிலைகுலைய வைத்துள்ளது.
கடலூர் மாவட்டம் புதுகுப்பத்தை சேர்ந்தவர் ஆகாஷ் .. இவர் ஒரு டிப்ளமோ மாணவர்.. விலை உயர்ந்த பல்சர் 220 பைக்கை ஆசை ஆசையாக வாங்கினார். அதில், தன் நண்பன் ஏகேஷை அழைத்துக்கொண்டு இன்று காலை கடலூர் நோக்கி சென்றார்.

அப்போது, ஹெல்மட் போடவில்லை.. பைக்கையும் ஸ்பீடாக ஓட்டி சென்றுள்ளார். சின்னாண்டிக்குழி சாலை அருகே வந்தபோது, பல்சர் தன் கன்ட்ரோலை இழந்து, சாலையில் தாறுமாறாக ஓடியது.. ரோட்டோரம் நின்றிருந்த ஒரு பனை மரத்தின் மீது பலமாக மோதியது.
இதில், ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வந்த ஏகேஷ் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். தகவலறிந்து போலீசார் விரைந்து வந்தனர்.. அப்போது விபத்துக்குள்ளான பல்சர் வண்டியின் பின்னால் ஆகாஷ் எழுதி வைத்திருந்த வாசகத்தை கண்டனர். "இந்த வேகம் ஒருநாள் என்னை கொல்லக்கூடும், யாரும் அழ வேண்டாம்" என ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்தார் ஆகாஷ்.
சாலைவிதிகள் குறித்தும், தலைகவசம் அணிவது, உயிர்களின் மதிப்பு குறித்த எத்தனையோ வாசகங்கள் உள்ள நிலையில், ஆகாஷ் ஏன் இப்படி எழுதி வைத்தார்.. வேகமாக வண்டி ஓட்டினால் விபத்து ஏற்பட்டு உயிர் போகும் என்று தெரிந்தும் ஏன் இப்படி எழுதினார் என்றே தெரியவில்லை.. ஆனால் கடைசிவரை அவருக்கு உயிரின் அருமை தெரியாமலேயே போய்விட்டது!












Click it and Unblock the Notifications